முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சினிமா தயாரிப்பாளர் இப்ராகிம் ராவுத்தர் காலமானார்

புதன்கிழமை, 22 ஜூலை 2015      சினிமா
Image Unavailable

சென்னை: கேப்டன் பிரபாகரன், பூந்தோட்டக் காவல்காரன், புலண் விசாரணை உள்ளிட்ட வெற்றிப் படங்களை தயாரித்த இப்ராகிம் ராவுத்தர் சென்னையில்  நேற்று  காலமானார். மதுரை மாவட்டத்தை சேர்ந்த இபுராகிம் ராவுத்தர், நடிகரும் தமிழ்நாடு சட்டசபை எதிர்க்கட்சி தலைவருமான விஜயகாந்தின் நெருங்கிய நண்பராக இருந்தார்.

கடந்த ஒருமாத காலமாக உடல்நலக்குறைவு காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி  நேற்று காலை சுமார் 11 மணியளவில் காலமானார்.  அவரது உடல் சென்னை கோயம்பேடு நூறடி சாலையில் உள்ள ’ராவுத்தர் பிலிம்ஸ்’ அலுவலகத்தில் பொதுமக்கள் பார்வைக்காக வைக்கப்படும் என இப்ராகிம் ராவுத்தரின் குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.

விஜயகாந்த் -சினிமா பிரபலங்களும், ரசிகர்களும், அரசியல் பிரமுகர்களும் அஞ்சலி.  பிரபல சினிமா தயாரிப்பாளர் இப்ராகிம் ராவுத்தர் உடல் நலக்குறைவு காரணமாக நேற்று காலமானார். அவரது உடலுக்கு சினிமா பிரபலங்களும், ரசிகர்களும், அரசியல் பிரமுகர்களும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். அண்மையில் உடல் நலக்குறைவால் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் இப்ராகிம் ராவுத்தர் அனுமதிக்கப்பட்டிருந்தார். அப்போது அவரை இப்ராகிம் ராவுத்தின் நண்பரும், தேமுதிக தலைவருமான விஜயகாந்த் பார்த்து கண்ணீர் விட்டு அழுதார்.

நேற்று இப்ராகிம் ராவுத்தர் காலமான செய்தியை அறிந்ததும் விஜய்காந்த் அவரது இல்லத்திற்கு சென்று அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தியுள்ளார். அவருடன் மனைவி பிரேமலதா, மகன்கள் விஜய பிரபாகரன், சண்முக பாண்டியன், மைத்துனர் சுதீஷ் ஆகியோரும் கண்ணீர் அஞ்சலி செலுத்தினார்கள்.  விஜயகாந்த் நடித்த கேப்டன் பிரபாகரன், புலன் விசாரணை உள்ளிட்ட பல்வேறு படங்களை இப்ராகிம் ராவுத்தர் தயாரித்திருந்தார். திரைப்பட தயாரிப்பாளர் சங்கத் தலைவராகவும் ராவுத்தர் இருந்திருக்கிறார். இவர் கடைசியாக "புரியாத ஆனந்தம் புதிதாய் ஆரம்பம்" என்ற படத்தை தயாரித்தார். இப்படம் சமீபத்தில் வெளியானது.

இவருடைய உடலுக்கு இயக்குனர்கள் ஆர்.கே.செல்வமணி, விக்ரமன், பேரரசு உள்பட பலர் அஞ்சலி செலுத்தினர். இவரின் உடல் இன்று பிற்பகல் 12 மணியளவில் சாலிகிராமத்தில் உள்ள மசூதியில் நல்லடக்கம் செய்யப்படவுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago
View all comments

வாசகர் கருத்து