முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ராணுவ பள்ளி தாக்குதலில் தீவிரவாதிகளுக்கு உதவி : இந்தியா மீது பாகிஸ்தான் அபாண்ட குற்றச்சாட்டு

வெள்ளிக்கிழமை, 24 ஜூலை 2015      உலகம்
Image Unavailable

இஸ்லாமாபாத் - பாகிஸ்தான் பெஷாவரில் உள்ள ராணுவ பள்ளியில் கடந்த ஆண்டு டிசம்பரில் தலிபான் தீவிரவாதிகள் புகுந்து துப்பாக்கியால் சுட்டனர். அதில் 152 குழந்தைகள் மற்றும் ஆசிரியர்கள் உயிரிழந்தனர். நெஞ்சை உலுக்கிய இச்சம்பவம் உலகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. தலிபான் தீவிரவாதிகளுக்கு கண்டனங்கள் குவிந்தன. இந்த நிலையில் ராணுவ பள்ளியில் தாக்குதல் நடத்திய தீவிரவாதிகளுக்கு இந்தியா தனது உளவு பிரிவான ரா மூலம் உதவியதாக பாகிஸ்தான் குற்றம் சாட்டியுள்ளது.

பாகிஸ்தான் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சரத் அசீஷ், இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் டோவாலிடம் அதற்கான ஆதாரங்கலை வழங்கியுள்ளதாக பாகிஸ்தான் அரசின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். அதற்கான ஆதாரங்களை பாகிஸ்தான் உளவுதுறை அமைச்சகம் பல வழிகளில் திரட்டியதாகவும் அவர் கூறியுள்ளார். அந்த ஆதாரம் வெளியுறவு துறை மூலம் இந்தியாவிடம் வழங்கவுள்ளது. கராச்சி மற்றும் பலுசிஸ்தான் பகுதிகளில் தீவிரவாதிகளுக்கு இந்தியா உதவி செய்து வருவதாகவும் அதில் கூறப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து