முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சமூக வலை தளங்களை பார்ப்பது குழந்தைகளின் மனநலத்துக்கு கெடுதல்: ஆய்வில் தகவல்

வெள்ளிக்கிழமை, 24 ஜூலை 2015      உலகம்
Image Unavailable

ஒட்டாவா(கனடா) - ஒரு நாளைக்கு இரண்டு மணி நேரத்துக்கு மேல் பேஸ்புக்கில், குழந்தைகள் தங்களின் நேரத்தைச் செலவிடுவது அவர்களின் மனநலத்துக்கு கெடுதல் விளைவிக்கும் என்று புதிய ஆய்வு ஒன்றில் தகவல் தெரியவந்துள்ளது. கனடாவில் உள்ள ஹியூக் சம்பாசா கன்யிங்கா மற்றும் ரொசாமண்ட் லூயிஸ் ஆகியோர் மேற்கொண்ட ஆய்வில் தான் இந்தத் தகவல் கிடைத்துள்ளது. இவர்களின் ஆய்வுக் கட்டுரை சைபர் சைக்காலஜி, பிஹேவியர் அண்ட் சோஷியல் நெட்வொர்க் கிங் எனும் ஆய்விதழில் வெளியாகியுள்ளது.

 அதில், சமூக வலைதளங்களான பேஸ்புக், ட்விட்டர் மற்றும் இன்ஸ்டாகிராம் ஆகியவற்றில் ஒரு நாளைக்கு குழந்தைகள் 2 மணி நேரத்துக்கு அதிகமாகச் செலவிட்டால் அவர்களுக்கு தற்கொலை எண்ணங்கள் ஏற்படுவது உள்ளிட்ட பல மனநல பாதிப்புகள் உண்டாகும்.  குழந்தைகள் இத்தகைய வலைத்தளங்களில் அவர்கள் செலவிடும் நேரத்தையும், அவர்களின் மன நலத்தையும் ஒப்பீடு செய்து பார்த்த போது இந்த முடிவு கிடைக்கப்பெற்றது. 

7 வயது முதல் 12 வயது வரை உள்ள சுமார் 25 சதவீத குழந்தைகள் ஒரு நாளைக்கு 2 மணி நேரத்துக்கும் அதிகமாக சமூக வலைத்தளங்களில் தங்களின் நேரத்தைச் செலவிடுகிறார்கள். எனினும், சிலருக்கு இதே சமூக வலைத்தளங்கள் பிரச்சனையாக இருக்கும் போது, வேறு சிலருக்கு தீர்வாகவும் இருக்கின்றன. குழந்தைகளில் பலர் இந்த சமூக வலைத்தளங்களில் அதிக நேரத்தைச் செலவிடுவதால், அதே வலைத்தளங்களில் அவர்களின் ஆரோக்கியத்தை மையப்படுத்திய திட்டங்களைக் கொண்டு சேர்க்க முயற்சிக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து