முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தங்கம் விலை மீண்டும் உயர்வு: ஒரே நாளில் ரூ.264 அதிகரிப்பு

சனிக்கிழமை, 25 ஜூலை 2015      வர்த்தகம்
Image Unavailable

சென்னை - கடந்த சில நாட்களாக தங்கம் விலை சரிந்து வருகிறது. கடந்த 22–ந்தேதி ஒரு பவுன் ரூ. 18 ஆயிரத்து 864 ஆக இருந்தது. மறுநாள் பவுனுக்கு ரூ. 176 உயர்ந்து ரூ. 19 ஆயிரத்து 40 ஆக விற்றது.நேற்று மீண்டும் தங்கம் விலை ரூ. 288 குறைந்து பவுன் ரூ. 18 ஆயிரத்து 752 ஆக இருந்தது.

விலை குறைந்ததால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். நகை கடைகளில் கூட்டம் அலை மோதியது. நகை விற்பனையும் அதிகரித்தது.இந்த நிலையில் இன்று தங்கம் விலை மீண்டும் உயர்ந்தது. பவுனுக்கு ரூ. 264 அதிகரித்துள்ளது. ஒரு பவுன் ரூ. 19 ஆயிரத்து 16 ஆக உள்ளது. கிராமக்கு ரூ. 33 உயர்ந்துள்ளது. ஒரு கிராம் ரூ. 2,377–க்கு விற்கிறது,வெள்ளியும் கிலோவுக்கு ரூ. 235 உயர்ந்துள்ளது. ஒரு கிலோ ரூ. 33 ஆயிரத்து 860 ஆகவும், ஒரு கிராம் ரூ. 36.20 ஆகவும் உள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து