முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஐபிஎல் சூதாட்டப் புகார்:ஸ்ரீசாந்த் உள்ளிட்ட 36 வீரர்கள் விடுவிப்பு

சனிக்கிழமை, 25 ஜூலை 2015      விளையாட்டு
Image Unavailable

புதுடெல்லி: 2013-ம் ஆண்டு ஐபிஎல் ஸ்பாட் பிக்சிங் வழக்குகளிலிருந்து ஸ்ரீசாந்த், அங்கிட் சவான், அஜித் சந்திலா உட்பட 36 பேர் விடுவிக்கப்பட்டனர். 2013-ம் ஆண்டு, ஐபிஎல்-6-ம் தொடரில் ஸ்பாட் பிக்சிங் குற்றம்சாட்டப்பட்ட விரர்கள் ஸ்ரீசாந்த், அஜித் சந்திலா, அங்கிட் சவான் ஆகியோர் மீதான குற்றச்சாட்டுகளை தள்ளுபடி செய்தது டெல்லி நீதிமன்றம்.

ஐபில் கிரிக்கெட் 6-வது தொடரின் போது ஸ்பாட் பிக்சிங் வழக்கு தொடரப்பட்ட 36 பேர் மீதான குற்றச்சாட்டுகளையும் டெல்லி நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. கூடுதல் அமர்வு நீதிபதி நீனா பன்சல் அனைவரும் வழக்கிலிருந்து விடுவிக்கப்படுகின்றனர் என்று தனது உத்தரவில் கூறினார்.

இது குறித்து கருத்து தெரிவித்த ஸ்ரீசாந்த் எனக்கு நீதி கிடைத்து விட்டது, இது கடவுளின் செயல். நான் கிரிக்கெட்டுக்குத் திரும்ப முடியும். எனக்கு எந்த வருத்தமும், புகார்களும் இல்லை. நான் உடனடியாக முறையான பயிற்சிக்குத் திரும்பவுள்ளேன். பிசிசிஐ எனக்கு அனுமதி அளிக்கும் என்று நம்புகிறேன். பிசிசிஐ வசதிகளைப் பயன்படுத்தி உடல் தகுதி நிலைகளை சரிசெய்து கொண்டு அணித் தேர்வுக்கு தயாராகிவிடுவேன் என்றார்.

முன்னதாக கடந்த மே 23-ம் தேதியன்று நேற்றைய உத்தரவுக்காக வழக்கு ஒத்தி வைக்கப்பட்டது. டெல்லி போலீஸின் சிறப்பு பிரிவு 42 பேர் மீது குற்றம் சாட்டியிருந்தது. இதில் 6 பேர் தலைமறைவு என்பது குறிப்பிடத்தக்கது.  2013 ஐபிஎல் தொடரின் போது ஸ்பாட் பிக்சிங் சூதாட்டத்தில் ஈடுபட்டதாக டெல்லி போலீஸ் ஸ்ரீசாந்த், அங்கிட் சவான் மற்றும் அஜித் சந்திலா ஆகியோரை அந்த ஆண்டு மே மாதம் கைது செய்தது. ஜூலை 2103-ல் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. ஆனால் கோர்ட்டில் குற்றப்பதிவு தாக்கல் செய்யப்படவில்லை, நடைமுறைச் சிக்கல்கள் காரணம் என்று கூறப்பட்டது.

செப்டம்பர் 2013-இல் ஸ்ரீசாந்த் மற்றும் சவான் ஆகியோருக்கு பிசிசிஐ ஆயுள் தடை விதித்தது. ஆனால் சந்திலா விவகாரம் பிசிசிஐ-யின் ஒழுங்குமுறை கமிட்டியின் முன் நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து