முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஆவின் ‘குலோப்ஜாமூன்’: விற்பனைக்கு அறிமுகம்

சனிக்கிழமை, 25 ஜூலை 2015      வர்த்தகம்
Image Unavailable

சென்னை: ஆவின் நிறுவனம் புதிய ’லாங் – லைஃப் குலோப்ஜாமூன்’ யை அறிமுகப்படுத்தி உள்ளது. இது  30 நாட்கள் வரை சுவையும் தரமும் குறையாமல் இருக்கும். “ஆவின்” நிறுவனம் தமிழ்நாட்டில் நாள் ஒன்றுக்கு சுமார் 30 லட்சம் லிட்டர் பால் கொள்முதல் செய்கிறது. சென்னையில் தினசரி நாள் ஒன்றுக்கு 11 லட்சத்து 70 ஆயிரம் லிட்டர் பால் விற்பனை செய்யப்படுகிறது.

நுகர்வோர் நலனில் அக்கறை கொண்டு தரமான பாலை விநியோகம் செய்து வருகிறது. பால் உற்பத்தியிலிருந்து விநியோகம் செய்யும் வரை எல்லா நிலைகளிலும் 19 வகையான தரப்பரிசோதனை  செய்து தரமான பாலை நுகர்வோர்களுக்கு அளித்து வருகிறது. ஆவின்  பதப்படுத்தப்பட்ட பால், இரட்டிப்பு நீக்கிய பால், தரப்படுத்தப்பட்ட பால், முழு பாலாடைகள் போன்ற 4 வகை பால்களை விற்பனை செய்து வருகிறது.

இது போன்றே வெண்ணெய், நெய், சூடான பால், சுவையூட்டிய நறுமண பால், பால் பவுடர், பாதாம்  மிக்ஸ் பால் பவுடர், டெட்ரா மிக்ஸ், மோர், தயிர், ஐஸ்கிரீம்கள், பால்கோவா, லஸ்ஸி,   மைசூர்பாகு, குலோப் கொய்யா,போன்ற பால் பொருட்கள் உற்பத்திக்கு ஆகியவை விற்பனை செய்யப்படுகிறது. இப்போது புதிதாக ஆவின் நிறுவனம் ’லாங் – லைஃப் குலோப்ஜாமூன்’ஐ அறிமுகப்படுத்தி உள்ளது. இது சுத்தமான அக்மார்க் ஆவின் நெய்யினால் தயாரிக்கப்பட்டது.

125கிராம் ரூ.50, 250 கிராம் ரூ.95. தனித்தனி பாக்கிங்கில் கிடைக்கும். எந்தவிதமான ரசாயனப் பொருட்களும் சேர்க்கப்படுவது இல்லை. உடனே சாப்பிட ஏதுவாக ஸ்பூனுடன் தரப்படுகிறது. இது தற்போது சென்னையில் உள்ள அனைத்து ஆவின் பாலகங்களிலும் கிடைக்கும். ஆவின் பொருட்கள் எக்ஸ்பிரஸ் அவென்யூ மாலில் உள்ள பார்லரில் விற்கப்படுகிறது. இதே போல வேளச்சேரி பீனிக்ஸ் மார்க்கெட் சிட்டி மாலில் ஒரு பார்லர் திறக்கப்பட உள்ளது.

டிரைவ் இன்–ஆவின் பார்லர் விருகம்பாக்கத்தில் ஆற்காடு சாலையில் டிரைவ் இன் பார்லரையும், பெசன்ட் நகர், பாலவாக்கம், வேப்பேரி, திருவான்மியூர், வண்ணந்துறையிலும், ஆவின் பார்லர்கள் திறக்கப்படும். மைலாப்பூர், தேனாம்பேட்டையிலும் இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளது என்று ஆவின் நிர்வாகம் கூறியுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago
View all comments

வாசகர் கருத்து