முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பொறியியல் மாணவி தற்கொலை: ஆந்திர அமைச்சர்களுக்கு ரோஜா சூடான கேள்வி

ஞாயிற்றுக்கிழமை, 26 ஜூலை 2015      இந்தியா
Image Unavailable

ஐதராபாத்: பொறியியல் கல்லூரி மாணவி ஈவ் டீசிங் காரணமாக தற்கொலை செய்து கொண்டுள்ள விவகாரத்தில் பெண் அமைச்சர்கள் மவுனம் காப்பது ஏன்? என்று ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியின் எம்.எல்.ஏவும், நடிகையுமான ரோஜா கேள்வி எழுப்பினார்.

இது குறித்து அவர் ஐதராபாத்தில் செய்தியாளர்களிடம் கூறியதாவது:  குண்டூரில் உள்ள நாகார்ஜுனா பல்கலைக்கழகத்தில் பொறியியல் படிக்கும் ரிசிதேஷ்வரி என்ற மாணவி கடந்த சில நாட்களுக்கு முன் ஈவ் டீசிங் காரணமாக தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதுகுறித்து அவர் கடிதமும் எழுதி வைத்துள்ளார். ஆனால் ஆந்திர அரசு இது தொடர்பாக ஒருவரை கூட இதுவரை கைது செய்யவில்லை. ஆந்திர மாநிலத்தில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாமல் போய் விட்டது.

இந்த சம்பவத்தில் உயர் நீதிமன்றம் தகுந்த விசாரணைக்கு உத்தரவிட வேண்டும். இந்த சம்பவம் குறித்து ஆந்திர கல்வி அமைச்சர் கண்டுகொள்ளாமல் உள்ளார். மேலும் மாநில பெண் அமைச்சர்களும் மவுனம் காக்கின்றனர். இது போன்ற சம்பவங்கள் மாநிலத்தில் தொடராமல் இருக்க அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.  இவ்வாறு ரோஜா கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து