முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வெங்காய விலை அதிகரிப்பை கட்டுப்படுத்த பாகிஸ்தானில் இருந்து 10ஆயிரம் டன் வெங்காயம் இறக்குமதி

திங்கட்கிழமை, 27 ஜூலை 2015      இந்தியா
Image Unavailable

புதுடெல்லி - டெல்லியில் வெங்காயம் ஒரு கிலோவுக்கு ரூ40 என விற்கப்படுகிறது. நாட்டில் வெங்காயம் விலை அதிகரிப்பதை கட்டுப்படுத்த 10ஆயிரம் டன் வெங்காயத்தை இறக்குமதி செய்ய இந்திய அரசு முடிவு செய்துள்ளது.இந்த வெங்காய இறக்குமதி பாகிஸ்தான்,சீனா,மற்றும் எகிப்து நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படுகிறது.நாட்டில் போதிய அளவில் வெங்காயம் கையிருப்பில் உள்ளது எனவே அதன் விலை கடுமையாக அதிகரிக்கும் என அச்சப்படத்தேவையில்லை என அதிகாரிகள் தெரிவித்தனர்.

இந்தியாவில் விற்கப்படும் வெங்காய விலை நாசிக்கில் உள்ள லாசாலா கன் மண்டியில் நிர்ணயிக்கப்படுகிறது.அங்கு ஒருகிலோ வெங்காயம் ரூ15ல் இருந்து ரூ25ஆக அதிகரித்துள்ளது.அதாவது 66சதவீதம் விலை அதிகரித்தது.தற்போது ராபி வெங்காய விளைச்சலில் 28 லட்சம் டன் கையிருப்பில் உள்ளது. இந்த வெங்காயம் 2மாத காலத்திற்கு போதுமானதாகும்.இந்த நிலையில் காரிப் பருவ கால வெங்காய அறுவடை ஆந்திர மாநிலத்தில் துவங்கி விட்டதுஎன தேசிய தோட்டக்கலை ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு பவுன்டேஷன் இயக்குனர் ஆர்.பி.குப்தா தெரிவித்தார்.

வரவிருக்கும் மாதங்களில் நாட்டின் தேவைக்கான வெங்காயத்தை பெறுவது தொடர்பாக மத்திய அரசும் தேசிய வேளாண் கூட்டுறவு மார்கெட்டிங் பெடரேஷனும்(நாபட்) 10ஆயிரம் டன் வெங்காயத்தை ,இறக்குமதி செய்வதற்கு டெண்டர் விட்டுள்ளது.இந்திய இறக்குமதி விதிமுறைகளுக்கு ஏற்ப வெங்காயம் சப்ளை செய்யும் நாடுகளில் இருந்து வெங்காயத்தை இறக்குமதி செய்வதற்கு இந்தியா முடிவெடுத்துள்ளது.பாகிஸ்தான்,சீனா, எகிப்து ஆகிய நாடுகளில் இருந்து வெங்காயம் இறக்குமதி செய்யப்படும் என எதிர் பார்க்கப்படுகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து