முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நரேந்திர மோடி சென்னை வருகை

திங்கட்கிழமை, 27 ஜூலை 2015      தமிழகம்
Image Unavailable

சென்னை -   பிரதமராக நரேந்திர மோடி பொறுப்பேற்ற பிறகு முதல் முறையாக அடுத்தமாதம் ஆகஸ்ட் 7–ந்தேதி தமிழகம் வருகிறார்.இதுபற்றி தமிழக பிஜேபிதலைவர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் கூறியதாவது :- தேசிய கைத்தறி நாள் விழா அடுத்த மாதம் 7–ந்தேதி நடக்கிறது. இந்தவிழாவை மத்திய அரசு சென்னையில் நடத்துகிறது.சென்னை பல்கலைக்கழக நூற்றாண்டு விழாமண்டபத்தில் நடக்கும் இந்த நிகழ்ச்சியில் தென் மாநிலங்களை சேர்ந்த 3 ஆயிரம் நெசவாளர்கள்பங்கேற்கிறார்கள். விழாவில் பிரதமர் மோடி பங்கேற்கிறார்.

நெசவாளர்கள் நிறைந்த நமது மாநிலத்தில் இந்த நிகழ்ச்சியை நடத்தி பெருமை சேர்க்கிறார்கள்.தமிழகத்தில் இருந்து 1000 நெசவாளர்கள் கலந்து கொள்கிறார்கள்.சாதனை படைத்த நெசவாளர்களுக்கு பிரதமர் மோடி இந்த விழாவில் விருது வழங்கி கவுரவிக்கிறார்.முழுக்க முழுக்க அரசு விழாவில் கலந்து கொண்டாலும் முதல் முறையாக சென்னை வரும் பிரதமர் மோடிக்கு விமான நிலையத்தில் பிஜேபி சார்பில் உற்சாகவரவேற்பு அளிக்க ஏற்பாடுகள் செய்து வருகிறோம்.

6–ந்தேதி தேசிய தலைவர் அமித்ஷா மதுரை வருகிறார். அங்கு நடைபெறும் கட்சி நிகழ்ச்சியில் அவர் கலந்து கொள்கிறார். பிஜேபி தலைவர் அமித்ஷாவும், பிரதமர் மோடியும் தமிழகம் வருவதால் கட்சியினர் உற்சாகம் அடைந்துள்ளனர்.இவ்வாறு அவர் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago
வாசகர் கருத்து

1 கருத்துகள்

  1. Anonymous July 28, 11:37

    வேல்கோமே சார்..............

    Reply to this comment
    View all comments

    வாசகர் கருத்து