முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஸ்ரீசாந்த் மீதான தடையை நீக்கக்கோரி கேரள கிரிக்கெட் சங்கம் பிசிசிஐக்கு வேண்டுகோள்

திங்கட்கிழமை, 27 ஜூலை 2015      விளையாட்டு
Image Unavailable

திருவனந்தபுரம் - கிரிக்கெட் சூதாட்டத்திலிருந்து ஸ்ரீசாந்த் டெல்லி கோர்ட்டால் விடுவிக்கப்பட்டார். இதனையடுத்து அவர் மீதான ஆயுட்கால தடையை விலக்கிகொள்ள பிசிசிஐயிடம் கேரள கிரிக்கெட் சங்கம் வேண்டுகோள் விடுக்க உள்ளது. ஐபிஎல் கிரிக்கெட் சூதாட்டத்தில் ஈடுபட்டதாக ஸ்ரீசாந்த் கைது செய்யப்பட்ட நிலையில், அதுகுறித்த விசாரணை முடிந்து சமீபத்தில் டெல்லி நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. அப்போது ஸ்ரீசாந்த் உட்பட கைதான மூவர் மீதான குற்றச்சாட்டுகளை நிரூபிக்க போதிய ஆதாரங்கள் இல்லை என்று கூறி மூவரையும் விடுதலை செய்து தீர்ப்பு வழங்கியது.

இதனிடையே, ஸ்ரீசாந்த் கைதானதை தொடர்ந்து, அவருக்கு கிரிக்கெட் விளையாட பிசிசிஐ ஆயுட்கால தடை விதித்திருந்தது. இந்த தடையை விலக்கிக்கொள்ள கேரள கிரிக்கெட் சங்கம் கோரிக்கைவிடுக்க முடிவு செய்துள்ளது. கேரள கிரிக்கெட் சங்க தலைவர் மாத்யூதான் தற்போது பிசிசிஐ துணை தலைவராகவும் உள்ளார். கேரள கிரிக்கெட் சங்க செயலாளர் அனந்தநாராயணன் இதுப்பற்றி தெரிவிக்கையில், ஸ்ரீசாந்த் மீதான தடையை விலக்க வேண்டும் என்று பிசிசிஐயிடம் கோரிக்கை வைக்கப்படும் என்றார். பிசிசிஐ உயர் அதிகாரிகளை சந்தித்து இக்கோரிக்கையை வலியுறுத்த கேரள கிரிக்கெட் சங்க நிர்வாகிகள் குழு மும்பை செல்ல உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து