முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தில் மேலும் 3 நாட்களுக்கு மழை பெய்யும்: வானிலை ஆய்வு மையம் தகவல்

திங்கட்கிழமை, 27 ஜூலை 2015      தமிழகம்
Image Unavailable

சென்னை, கத்திரி வெயில் முடிந்த பின்னரும் தமிழகத்தில் வெயிலின் தாக்கம் கடுமையாகவே இருந்து வருகிறது. அதிலும் குறிப்பாக சென்னை, மதுரை, திருச்சி, வேலூர் உள்பட மாவட்டங்களில் தினமும் வெயில் 100 டிகிரிக்கு மேல் இருக்கிறது.

தலைநகர் சென்னையில் வெயில் தொடர்ந்து தனது கோரமுகத்தை காட்டி வருகிறது. இந்தநிலையில் சில நாட்களாக மாலை மற்றும் இரவு நேரங்களில் சென்னையின் மழை பெய்து பூமியை குளிர்வித்து வருகிறது.

இந்தநிலையில் தமிழகத்தில் மேலும் 3 நாட்களுக்கு மழை பெய்யும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து சென்னை வானிலை மைய அதிகாரி ஒருவர் கூறியதாவது:- 

வளி மண்டல மேல் அடுக்கில் உருவாகியுள்ள காற்று சுழற்சி தமிழக-புதுச்சேரி கடல்பகுதியில் நிலை கொண்டு இருந்தது. அது நகர்ந்து தற்போது மேற்கு வங்கக்கடல் பகுதியில் நிலைகொண்டுள்ளது. வெப்ப சலனம் காரணமாக தமிழகத்தில் மேலும் 3 நாட்களுக்கு மழை பெய்யும். சென்னையை பொருத்தவரையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். இரவு நேரத்தில் பல இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு உண்டு.இவ்வாறு அவர் கூறினார்.

நேற்று காலை 8.30 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேர கணக்கீட்டின் படி, தமிழகத்தில் நீலகிரி மாவட்டம் நடுவட்டம், தேவலா பகுதிகளில் அதிகபட்சமாக 4 செ.மீ. மழை பதிவாகி உள்ளது. புதுக்கோட்டை கீரனூரில் 3 செ.மீ. மழை பதிவாகி உள்ளது. கடலூர் மாவட்டம் பரங்கிப்பேட்டை, நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம், புதுக்கோட்டை மாவட்டம் பெருங்களூர், திருமயம் உள்ளிட்ட பகுதிகளில் 2 செ.மீ. மழை பதிவாகி உள்ளது.இதுதவிர புதுக்கோட்டை, திருவண்ணாமலை, காஞ்சீபுரம் உள்ளிட்ட மாவட்டங்களிலும் மழை பதிவாகி உள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து