முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நேபாள அரசியலமைப்பு சட்டத்தில் திருத்தம் மதச்சார்ப்பின்மை என்ற வார்த்தையை நீக்க முடிவு

திங்கட்கிழமை, 27 ஜூலை 2015      இந்தியா
Image Unavailable

காத்மாண்டு: நேபாள அரசியலமைப்பு சட்டத்தில் மதச்சார்பின்மை என்ற வார்த்தை உள்ளது.இந்த வார்த்தையை நீக்கி விட்டு மதசுதந்திரம் அல்லது இந்து என்ற வார்த்தையை போட வேண்டும் என அந்த நாட்டு கட்சிகளும் மக்களும்  வலியுறுத்தினர். இந்த மாற்றத்தை ஏற்க நேபாள அரசியல் கட்சிகள் ஒப்புகொண்டுள்ளன. கடந்த 2007ம் ஆண்டு நேபாளம் மதச்சார்பின்மை நாடு என அறிவிக்கப்பட்டது.அந்த நாட்டில் ஒன்று பட்ட கம்யூனிஸ்ட் கட்சி ஆட்சிக்கு வந்த போது நேபாளம் மதச்சார்பின்மை நாடு என அறிவிக்கப்பட்டது. அந்த நாட்டில் பல ஆண்டுகளாக உள்நாட்டு கலகத்தில் ஈடுபட்ட தீவிரவாத கம்யூனிஸ்ட்டுகள் தாக்குதலில் 13ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் கொல்லப்பட்டனர்.அந்த கட்சியினர் அரசியலுக்கு வந்த பின்னர் அங்கு உள்நாட்டு கலகம் தவிர்க்கப்பட்டது.

நூற்றாண்டுகளாக நேபாளம் இந்து நாடு என அடையாளம் காணப்பட்டிருக்கிறது.அந்த நாட்டில் 80 சதவீதத்தினர் இந்துக்கள் ஆவார்கள். நேபாள அரசியலமைப்பு சட்டத்தில் மதச்சார்பின்மை என்ற வார்த்தையை நீக்க வேண்டும் என அந்த நாட்டின் பல லட்சம் மக்கள் வலியுறுத்தினர்.அவர்கள் மதச்சார்பின்மை என்ற வார்த்தையை நீக்கி விட்டு இந்து அல்லது மதச்சுதந்திரம் என்கிற வார்த்தையை அரசியலமைப்பு சட்டத்தில் சேர்க்க வேண்டும் என கூறினர்.

மதச்சார்பின்மை என்ற அரசியலமைப்பில் பொருத்தமானதாக இல்லை. பல லட்சம் மக்களை அந்த வார்த்தை எரிச்சலடையச்செய்துள்ளது. எனவே நாட்டு மக்களின் உணர்வுகளை மதிக்கும் வகையில் அரசியலமைப்பில் திருத்தம் கொண்டு வருவதற்கு நாங்கள் ஒப்புக் கொண்டுள்ளோம் என்று ஒன்று பட்ட கம்யூனிஸ்ட்-மாவோயிஸ்ட் தலைவர் புஷ்ப கமல் தகால் என்ற பிரசந்தா தெரிவித்தார்.

நேபாள காங்கிரஸ், நேபாள ஐக்கிய மார்க்கிஸ்ட் லெனினிஸ்ட் மற்றும் மாதேசி பகுதி சார்ந்த அரசியல் கட்சிகளும் மதச்சார்பின்மை என்ற வார்த்தையை நீக்குவதற்கு விருப்பம் தெரிவித்துள்ளன. நேபாள நாட்டிற்கு நேரடியாக பிரதமர் அல்லது ஜனாதிபதி தேர்வு செய்வது குறித்தும் மக்களின் கருத்து கேட்கப்பட்டிருக்கிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து