முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பாகுபலி பட ஹீரோ பிரபாசை நேரில் அழைத்து பிரதமர் மோடி வாழ்த்து

திங்கட்கிழமை, 27 ஜூலை 2015      சினிமா
Image Unavailable

டெல்லி - வசூல் சாதனை படைத்துள்ள பாகுபலி திரைப்படத்தின் ஹீரோ பிரபாஸ் டெல்லியில் பிரதமர் மோடியை சந்தித்து வாழ்த்து பெற்றார். தமிழ், தெலுங்கு என பல மொழிகளில் ரிலீசாகி இரு வாரங்களில் 350 கோடிக்கு மேல் வசூலித்துள்ள பாகுபலி திரைப்படத்தின் ஹீரோ பாத்திரத்தை ஏற்று நடித்தவர் பிரபாஸ்.

இந்நிலையில், பிரபாசை பிரதமர் மோடி அழைத்து வாழ்த்து தெரிவித்துள்ளார்.  தனது டிவிட்டர் தளத்தில் பிரதமர் இத்தகவலை வெளியிட்டுள்ளார். பாகுபலி பிரபாசை சந்தித்தேன் என்று மட்டும் அதில் கூறியுள்ளார். படத்தையும் வெளியிட்டு்ள்ளார். அந்த படத்தில் தெலுங்கு நடிகரும், பிரபாசின் பெரியப்பாவுமான, கிருஷ்ணம் ராஜூவும் உடனுள்ளார். பிரபாசும் தனது டிவிட்டர் கணக்கில் இப்படத்தை ஷேர் செய்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து