முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஆப்பிரிக்கா மீது அமெரிக்காவிற்கு திடீர் அக்கறை ஏன்? சீன அரசு நாளிதழ் தாக்கு

திங்கட்கிழமை, 27 ஜூலை 2015      உலகம்
Image Unavailable

பெய்ஜிங்: ஆப்பிரிக்க நாட்டில் சீனாவின் ஆதிக்கம் அதிகரித்து வருவதை தடுக்கும் விதமாக அமெரிக்க  ஜனாதிபதி ஒபாமா அந்த நாட்டிற்கு பயணம் மேற்கொள்கிறார் என்று சீன அரசின் நாளிதழான பீப்பிள் டெய்லி விமர்சித்துள்ளது.

ஆப்பிரிக்க கண்டத்தில் சீனாவின் புகழ் பரவி வருகிறது.சீனாவின் ஆதிக்கத்தை பொறுக்க முடியாமல் அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா தற்போது அந்த கண்டத்திற்கு பயணம் மேற்கொள்கிறார் என சீனாவின் குளோபல் டைம்ஸ் நாளிதழ் நேற்று செய்தி வெளியிட்டுள்ளது.ஆப்பிரிக்காவில் சீனாவை தனது எதிரியாக அமெரிக்கா கருதுகிறது என்றும் அந்த நாளிதழ் குறிப்பிட்டுள்ளது.ஆப்ரிக்கா மீது அமெரிக்காவிற்கு உறுதியான கொள்கை ஏதும் இல்லை.வெளிப்படையான பேச்சுகளும் கிடையாது என்று சீனாவின் ஆளும் கம்யூனிஸ்ட் கட்சியின் நாளிதழான பீப்பிள்ஸ் டெய்லி குறிப்பிட்டுள்ளது.ஆப்பிரிக்காவில் பலவீனமான திட்டங்களை அமெரிக்கா மேற்கொண்டு வருகிறது.ஆனால் அந்த நாட்டில் சாலை அமைப்பு அணை கட்டுதல் மற்றும் இதர உள்கட்டமைப்புகளை சீனா மேற்கொண்டு வருகிறது என்று சீனாவின் அரசு செய்தி நிறுவனமான ஜின்குவா அமெரிக்காவை விமர்சித்துள்ளது.

ஆப்பிரிக்க கண்டத்தில் தங்களது புகழை பரப்ப ஒபாமா விரும்பலாம் ஆனால் அந்த கண்டத்தில் அமெரிக்காவின் கடமை என்ன என்பது கேள்விக்குறியாகவே உள்ளது என்றும் அந்த செய்தி நிறுவனம் கூறியுள்ளது. அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா நேற்று எத்தியோப்பிய தலைவர்களுடன் தீவிரவாதத்தை ஒடுக்குதல் மனித உரிமைகள் மற்றும் பிராந்திய பாதுகாப்பு ,அருகாமையில் உள்ள சூடான் பிரச்சினை குறித்து பேசினார்.

கடந்த சில ஆண்டுகளாக ஆப்பிரிக்க கண்டத்தில் சீனாவின் பொருளாதார உறவுகள் மிக உயரிய அளவில் உள்ளது.கடந்த ஆண்டு மட்டும் 20ஆயிரம் கோடி டாலருக்கு இரு நாடுகள் இடையே வர்த்தகம் நடந்துள்ளது.ஆப்பிரிக்க கண்டத்தில் இருந்து எண்ணெய், தாமிரம், மற்றும் இதர மூலப்பொருட்களை சீனா இறக்குமதி செய்து வருகிறது.அதேநேரத்தில் ஆப்பிரிக்க கண்டத்தில் அமெரிக்காவின் வர்த்தகம் குறைந்துள்ளது.கடந்த 2013ம்ஆண்டில் 8ஆயிரத்து 500கோடி டாலர் அளவிலேயே ஆப்ரிக்காவுடனான வர்த்தகத்தை அமெரிக்கா மேற்கொண்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து