முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இந்தியாவின் ஏவுகணை நாயகன் முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் திடீர் மரணம்

திங்கட்கிழமை, 27 ஜூலை 2015      இந்தியா
Image Unavailable

ஷில்லாங்,(மேகாலயா): இந்தியாவின் ஏவுகணை நாயகன் என்று போற்றப்பட்ட முன்னாள் ஜனாதிபதி ஏ.பி.ஜே.அப்துல் கலாம் மேகாலயா மாநிலத்தில்  உள்ள ஷில்லாங் ஐ.ஐ.எம் கல்வி நிறுவனத்தில் நேற்று உரையாற்றிய போது மேடையிலேயே மயங்கி விழுந்தார்.அவர் உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.அங்கு அவருக்கு சிகிச்சை பலன் அளிக்காமல் நேற்று இரவு மரணம் அடைந்தார்.அவருக்கு வயது 84ஆகும்

முன்னாள் ஜனாதிபதி டாக்டர் ஏ.பி.ஜே.அப்துல் கலாம் நேற்று ஷில்லாங்கில் உள்ள ஐஐஎம்கல்வி நிறுவனத்தில் உரையாற்றிகொண்டிருந்தார்.அப்போது அவருக்கு திடீரென்று மயக்கம் ஏற்பட்டது.அவர் மேடையிலேயே மயங்கி விழுந்தார்.இதனைத்தொடர்ந்து அருகில் உள்ள பெத்தானி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்கள் ஆக்சிஜன் செலுத்தினர்.அவரது உடல் நிலை அபாய கட்டத்திலேயே இருந்தது என அந்த மருத்துவர்கள் தெரிவித்தார்கள்.இருப்பினும் சிகிச்சை பலன்இன்றி அவர் மரணமடைந்து விட்டதாக பின்னர் டாக்டர்கள் தெரிவித்தனர்.

முன்னதாகஇது குறித்து அந்த மருத்துவ மனையின் இயக்குனர் ஜான் ஷைலோ கூறுகையில் அப்துல் கலாமின் உடல் நிலை அபாய கட்டத்திலேயே இருந்தது.அவரது உடல் நிலை இயல்பு நிலைக்குவருவதற்காக சிகிச்சை அளித்து வந்தோம்.அவர் தீவிர சிகிச்சை பிரிவிலேயே வைக்கப்பட்டுஇருந்தார். அவரது உடல் நிலையை தீவிரமாக கண்காணித்தோம் .அவரது உடல் நிலை கவலைக்கிடமாகவே இருந்தது. என்றார்.அப்துல் கலாம் அனுமதிக்கப்பட்ட மருத்துவ மனைக்கு மேகாலயா கவர்னர் சண்முக நாதன் மற்றும் அந்த மாநில தலைமைச்செயலாளர் வர்ஜரி ஆகியோர் விரைந்து வந்து அப்துல் கலாமின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினார்கள்.

கடந்த 2002ம் ஆண்டு முதல் 2007ம் ஆண்டு வரை அப்துல் கலாம் ஜனாதிபதியாக இருந்தார். அவரது சொந்த ஊர் ராமேஸ்வரம் ஆகும். அப்துல் கலாமின் மறைவு செய்தி கேட்டு ராமநாதபுரம் மாவட்ட மக்கள் மட்டுமின்றி தமிழக மக்களும்மற்றும் இந்திய மக்களும்பெரும் துயரத்தில் ஆழ்ந்தார்கள். அப்துல் கலாம் மறைவுக்கு இந்திய தலைவர்களும் உலக தலைவர்களும் இரங்கல் தெரிவித்தனர். அப்துல் கலாமின் உடல் இன்று டெல்லிக்கு கொண்டு வரப்படுகிறது.

அவரது மறைவையொட்டி 7நாட்கள் துக்கம் அனுசரிக்கப்படும்  என்று மத்திய அரசு நேற்று அறிவித்தது.அப்துல் கலாம் அக்னி சிறகுகள் உள்பட பல புத்தகங்களை எழுதியுள்ளார். அவர் மாணவர்களிடம் கலந்துரையாடுவதில் மிகுந்த ஆர்வம் கொண்டவர். கனவு காணுங்கள் என்பது அப்துல் கலாமின் புகழ் பெற்ற வாசகம் ஆகும்.அப்துல் கலாம் கடந்த 1931ம்ஆண்டு அக் டோபர் மாதம் 15ம்தேதியன்று ராமேஸ்வரத்தில் பிறந்தார். இந்தியாவின் அணு ஆயுத ஏவுகணை நாயகன் என்ற சிறப்பை பெற்றவர்.அவரது தலைமையில் அக்னி மற்றும் பிருதிவி ஏவுகணைகள் தயாரிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.பாரதிய ஜனதா கட்சியின் முந்தைய ஆட்சியின் போது அப்துல் கலாம் ஜனாதிபதியாக பதவி ஏற்றார்.

அவர் கடந்த 92ம்ஆண்டு முதல் 99ம் ஆண்டு வரை பாதுகாப்புத்துறை அமைச்சரின் முதன்மைஅறிவியல் ஆலோசகராக பணியாற்றினார்.பல்வேறு பதவிகளை வகித்தவர் அப்துல் கலாம். இந்தியாவில் எத்தனையோ ஜனாதிபதிகள் பதவி வகித்தாலும் மக்கள் மனதில் நீங்காத இடம் பிடித்தவர் என்றால் அவர் அப்துல் கலாமாகதான் இருக்க முடியும்.அப்துல் கலாம்மறைவுக்கு பிரதமர் மோடி ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி,மத்திய உள்துறை அமைச்சர் ராஜ் நாத் சிங்முன்னாள் பிரதமர் வாஜ்பாய் ஆகியோர் இரங்கல் தெரிவித்தனர்.காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியும் இரங்கல் தெரிவித்தார்.அப்துல் கலாம் மறைவுக்கு முதல்வர் ஜெயலலிதா தனது ஆழ்ந்த இரங்கலையும் வேதனையையும் தெரிவித்து  அறிக் கை வெளியிட்டார்.இதேபோல தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் இளங்கோவன் பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் உள்ளிட்ட அனைத்து தலைவர்களும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 4 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து