முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பஞ்சாப்பில் தீவிரவாதிகள் பயங்கர தாக்குதல்: எஸ்.பி. உள்பட 11 பேர் பலி

திங்கட்கிழமை, 27 ஜூலை 2015      இந்தியா
Image Unavailable

குர்தாஸ்பூர் (பஞ்சாப்): பஞ்சாப் - குர்தாஸ்பூர் மாவட்டத்தில் தீவிரவாதிகள் என சந்தேகிக்கப்படும் நபர்கள் நடத்திய தாக்குதலில் ஒரு காவல்துறை அதிகாரி எஸ்.பி உட்பட 11 பேர் உயிரிழந்தனர்.  பாதுகாப்பு படையினர் நடத்திய பதில் தாக்குதலில் தீவிரவாதி மூவரும் கொல்லப்பட்டதாக பஞ்சாப் போலீஸார் தெரிவித்தனர்.

இந்தத் தாக்குதல் சம்பவம் குறித்து செய்தியாளர்களிடம் பேசிய பஞ்சாப் மாநில முதல்வர் பாதல், இது மிகவும் கவலைக்குரியது. தீவிரவாதம் என்பது மாநிலத்தின் பிரச்சினை அல்ல. தேசிய அளவில் இதனை தடுப்பதற்கான கொள்கை தேவைப்படுகிறது என்றார்.  இந்தத் தாக்குதல் குறித்து மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறும்போது, நமது அண்டை நாடுகளுடன் நல்லுறவைப் பேணுவதற்கே நாம் விரும்பும்போது, எல்லைத் தாண்டிய பயங்கரவாதம் அவ்வப்போது நிகழ்த்தப்படுவது ஏன் என்று தெரியவில்லை. நாம் முதலில் தாக்குதல் நடத்தவில்லை. ஆனால், தாக்கப்பட்டுள்ளோம். இதற்கு உரிய பதிலடியை நாம் தருவோம். இந்தத் தாக்குதல் குறித்து இன்று  நாடாளுமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்வதாக தெரிவித்தார்.

இதனிடையே, இந்தத் தாக்குதலின் பின்னணியில் ஐ.எஸ்.ஐ. இருக்கக் கூடும் என மத்திய இணையமைச்சர் ஜிதேந்தர் சிங் கூறியுள்ளார். முன்னதாக, பாகிஸ்தானின் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ-யின் உதவியோடு, இந்திய சுதந்திர தின கொண்டாட்டத்தை சீர்குலைக்கும் விதமாக லஷ்கர்-இ-தாய்பா இயக்கத்தின் தளபதி மக்பூல் கான் தலைமையிலான 10 பேர் கொண்ட குழு, ஜம்முவின் துணியால் பகுதியிலிருந்து ஊடுருவ முயற்சி மேற்கொண்டிருப்பதை புலனாய்வு கடந்த 24-ம் தேதி எச்சரிக்கை விடுத்ததாக தகவல்கள் வெளியானது குறிப்பிடத்தக்கது.

முன்னதாக, ஜம்மு - காஷ்மீர் வழியாக பஞ்சாப் செல்கின்ற அமிர்தசரஸ் - பதான்கோட் நெடுஞ்சாலையில் ஒரு காரில் அதிகாலை 5 மணியளவில் வந்திறங்கிய 3 மர்ம நபர்கள், பேருந்து ஒன்றில் பயணிகளை நோக்கி சரமாரியாக சுட்டனர். இந்தத் தாக்குதலில் 4 பயணிகள் பலத்த காயமடைந்தனர். அவர்கள் உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக குர்தாஸ்பூர் காவல் துறை அதிகாரி குர்பிரீத் சிங் தெரிவித்தார்.

பின்னர், ராணுவ உடையில் இருந்த அந்த மர்ம நபர்கள், தினாநகர் காவல் நிலையத்துக்குல் புகுந்து, காவலர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தினர். அதன் பின்னர், போலீஸாருக்கும் மர்ம நபர்களுக்கும் இடையே நீண்ட நேரம் துப்பாக்கிச் சூடு நடந்தது. இதையடுத்து, சம்பவ இடத்துக்கு கூடுதல் படைகள் அனுப்பப்பட்டது.  இதையடுத்து, பஞ்சாப் முதல்வர் பிரகாஷ் சிங் பாதல் மற்றும் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் ஆகியோருடன் மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் அவசர ஆலோசனை நடத்தினார். நிலைமையை கட்டுக்குள் கொண்டுவர மத்திய அரசு முழு ஒத்துழைப்பு தரும் என்று ராஜ்நாத் சிங் உறுதியளித்தார். இதனிடையே, பஞ்சாப் காவல் துறை உயரதிகாரிகளுடன் மத்திய உள்துறைச் செயலர் எல்.சி. கோயல் ஆலோசனை நடத்தி, நிலைமையை கண்காணித்து வருகிறார்.

அதே வேளையில், பதான்கோட் - குர்தாஸ்பூர் ரயில் பாதையில் 5 வெடிகுண்டுகள் கண்டெடுக்கப்பட்டதாக பஞ்சாப் போலீஸார் தெரிவித்தனர். ராணுவ கமாண்டோக்கள், அதிரடிப் படையும் சம்பவ இடத்துக்கு விரைந்தது. பதான்கோட்டில் இருந்து வந்த ராணுவம், சம்பவம் நடந்த இடத்தை தனது கட்டுப்பாட்டில் கொண்டு வந்து, தாக்குதல் நடத்தியவர்களைத் தேடிப் பிடிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளது.

இதன் தொடர்ச்சியாக, இந்திய - பாகிஸ்தான் எல்லைப் பகுதிகளில் பாதுகாப்புப் பலப்படுத்தப்பட்டுள்ளதுடன், வெடிகுண்டு நிபுணர்களும் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்ட இடத்தில் ராணுவ ஹெலிகாப்டர்கள் மூலம் ரோந்துப் பணி மேற்கொள்ளப்பட்டுள்ளது.

தீவிரவாதிகள் என்ற சந்தேகிக்கப்படும், மர்மநபர்கள் தாக்குதல் நடத்திய தினாநகர் காவல்நிலையத்தில் தொடர்ந்து நடந்த துப்பாக்கி சண்டையில் தீவிரவாதிள் 3 பேரும் போலீசாரால் சுட்டுக் கொல்லப்பட்டனர். கொல்லப்பட்ட தீவிரவாதிகள் லஷ்கர்-இ-தொய்பா அல்லது ஜெய்ஸ்-இ-மொகமத் அமைப்பை சேர்ந்தவர்களாக இருக்கக்கூடும் என்று சந்தேகிக்கப்படுகிறது. இந்தத் தாக்குதலைத் தொடர்ந்து, பஞ்சாப், டெல்லி, உத்தரப் பிரதேசம், மகாராஷ்டிரம் உள்ளிட்ட மாநிலங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து