முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சிந்தனையின் பொக்கிஷம் அப்துல் கலாம் முதல்வர் ஜெயலலிதா இரங்கல்

திங்கட்கிழமை, 27 ஜூலை 2015      தமிழகம்
Image Unavailable

சென்னை: முன்னாள் ஜனாதிபதி டாக்டர் அப்துல்கலாம் நேற்று இரவு திடீரென மரணம் அடைந்தார். அவரது மறைவுக்கு தமிழக முதல்வர் ஜெயலலிதா தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வேதனையுடன் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தி வருமாறு,

நாட்டின் 11வது ஜனாதிபதி இருந்த டாக்டர் அப்துல்கலாம் திடீரென மரணமடைந்து விட்டார் என்ற செய்தி அறிந்து மிகுந்த துயரமும் ஆழ்ந்த வேதனையும் அடைந்தேன். மக்கள் மனதை கவர்ந்த மிகப்பெரிய விஞ்ஞானி அவர். தமிழக மக்களால் விரும்பப்பட்ட மண்ணின் மைந்தர் அவர். பாரதரத்னா விருதுக்கு சொந்தகாரர்.

சுதந்திர இந்தியாவுக்கு பிறகு பிரபலமடைந்த முக்கிய தலைவர்களின் அவரும் ஒருவர். மிக எளிமையான குடும்பப்பின்னனியை கொண்டவர். இராமேஸ்வரத்தில் எழ்மையான குடும்பத்தில் பிறந்தார். விடாமுயற்சி, கடின  உழைப்பு, அறிவாற்றல் இவற்றின் மூலம் உயர்ந்த நிலைக்கு வந்தவர். இந்திய விண்வெளி ஆராய்ச்சி ஏவுகணைகள் மற்றும் அணு ஆயுத திட்டங்களில் இவரது பங்கு மகத்தானது. மிகச்சிறந்த விஞ்ஞானி அவர். விண்வெளி தொழில்நுட்பத்தில் இந்தியாவிற்கு பெருமை சேர்த்தவர். இந்தியாவின் பெருமையை உலகளவில் உயர்த்தியவர். அணுசக்தியில் தன்னிறைவை ஏற்படுத்தியவர்.

இந்த நூற்றாண்டு மக்களின் மனம் கவர்ந்த தலைவர் அவர். குறிப்பாக குழந்தைகள் மாணவர்களின் அன்பை பெற்றவர். இந்தியர்களுக்காக பல நல்ல விஷயங்களை எழுதியவர் மட்டுமல்ல பேசியவரும் கூட. இளைஞர்களுக்காக பல நல்ல விஷயங்களை போதித்திருக்கிறார். எளிமையாக வாழ்ந்து மக்கள் மனதை தொட்டவர். உண்மையான தேசபற்று உள்ளவர். சிந்தனையின் பொக்கிஷமாக திகழ்ந்தார். கிராமபுற மக்களின் நலனுக்காக பல தொழில்நுட்பங்களை கொண்டுவந்தவர். அவரது மறைவு ஈடு செய்ய முடியாத இழைப்பாகும். அவரது மறைவால் வாடும் மக்களின் துயரத்தில் குறிப்பாக தமிழக மக்கள் மற்றும் இந்திய மக்களின் துயரத்தில் நானும் என்னை இணைத்து கொள்கிறேன். இவ்வாறு முதல்வர் ஜெயலலிதா அந்த அறிக்கையில் கூறியுள்ளார். இதேபோல் தமிழக தலைவர்களும் இரங்கல் தெரிவித்துள்ளனர். ஜனாதிபதி முதல் அமைச்சர்கள் வரை அனைவரும் கலாம் மறைவுக்கு தங்கள் இரங்கலை தெரிவித்துள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து