முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அப்துல் கலாம் மறைவு அ தி.மு.க. நிகழ்ச்சிகள் ஒரு வாரம் ஒத்திவைப்பு: ஜெயலலிதா அறிவிப்பு

செவ்வாய்க்கிழமை, 28 ஜூலை 2015      தமிழகம்
Image Unavailable

சென்னை - அப்துல் கலாம் மறைவையொட்டி அ தி.மு.க.  நிகழ்ச்சிகள் அனைத்தும் ஒரு வார காலத்திற்கு ஒத்திவைக்கப்படுவதாக முதலமைச்சரும், அ தி.மு.க. பொதுச்செயலாளருமான ஜெயலலிதா அறிவித்துள்ளார். ஜெயலலிதா நேற்று வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது:– இந்திய திருநாட்டின் 11–வது குடியரசுத் தலைவர் பதவியில், உலகம் புகழும் வகையில் பணியாற்றிய ‘பாரத் ரத்னா’ டாக்டர் ஏ.பி.ஜெ. அப்துல் கலாம் மரணமடைந்த செய்தி கேட்டு பெரும் அதிர்ச்சியில் ஆழ்ந்திருக்கிறேன்.
தமிழ் அன்னையின் பெருமைமிகு புதல்வராக விளங்கியவர் டாக்டர் ஏ.பி.ஜெ. அப்துல் கலாம்.

அவரது எளிமையான வாழ்வும், எல்லோரையும் நேசிக்கும் பண்பும் உலகம் அறிந்த உயர் குணங்கள். டாக்டர் ஏ.பி.ஜெ. அப்துல் கலாம் தன்னுடைய உழைப்பால், அறிவால், ஆற்றலால், தியாகத்தால் பல மகத்தான சாதனைகளை நிகழ்த்தி வரலாற்றில் இடம் பெற்றவர். அவருடைய மறைவிற்கு அஞ்சலி செலுத்தும் வகையில், அண்ணா தி.மு.க.வின் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்ச்சிகள் அனைத்தும் ஒரு வார காலத்திற்கு ஒத்தி வைக்கப்படுகின்றன என்பதை தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு ஜெயலலிதா தெரிவித்துள்ளார்

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago
View all comments

வாசகர் கருத்து