முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தமிழக உளவுப் பிரிவு ஐ.ஜி.யாக டேவிட்சன் தேவாசீர்வாதம் நியமனம்

செவ்வாய்க்கிழமை, 28 ஜூலை 2015      தமிழகம்
Image Unavailable

சென்னை - தமிழக உளவுப்பிரிவு ஐ.ஜி.யாக எஸ்.டேவிட்சன் தேவாசீர்வாதம் நியமிக்கப்பட்டுள்ளார். உளவுப்பிரிவு ஐ.ஜி. பதவி மிக முக்கியமானதாகும். இந்தப் பதவியில் இருப்பவர்கள் முதல் வருடன் நேரடி தொடர்பில் இருப்பார்கள். தற்போது தமிழக உளவுப்பிரிவு ஐ.ஜி.யாக இருக் கும் பி.கண்ணப்பன், வரும் 31-ம் தேதியுடன் ஓய்வு பெறுகிறார். இதனால் அடுத்த உளவுப்பிரிவு ஐ.ஜி. யார் என்று பலரும் எதிர்பார்த்திருந்தனர்.இந்நிலையில், தற்போது நிர் வாகப்பிரிவு ஐ.ஜி.யாக இருக்கும் எஸ்.டேவிட்சன் தேவாசீர்வாதம், உளவுப்பிரிவு ஐ.ஜி.யாக நியமிக்கப்பட்டிருக்கிறார்.

இதற்கான உத்தரவை உள்துறைச் செயலர் அபூர்வ வர்மா நேற்று வெளியிட்டார்.உளவுப்பிரிவு ஐ.ஜி.யாக நியமிக்கப்பட்டுள்ள டேவிட்சன் தேவாசீர்வாதம், 2012-ம் ஆண்டில் மேற்கு மண்டல உளவுப்பிரிவு டி.ஐ.ஜி.யாக இருந்தவர். 1995-ம் ஆண்டு ஐபிஎஸ் முடித்து தருமபுரியில் கூடுதல் எஸ்.பி.யாக பணியைத் தொடங்கிய இவர், கோவை, மதுரையில் துணை கமிஷனராகவும், கிருஷ்ணகிரி, சேலம், நாமக்கல், ஈரோடு, திருப்பூர், நீலகிரி, கோவை, கடலூர், கரூர், காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் எஸ்.பி.யாகவும், போதைப் பொருள் தடுப்பு பிரிவு தெற்கு மண்டல இயக்குநராகவும் பணிபுரிந்துள்ளார். சேலம் மற்றும் கோவை மண்டல டி.ஐ.ஜி.யாகவும் பதவி வகித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து