முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஷில்லாங்கின் கலாம் உரை புதிய புத்தகத்தில் இடம் பெறுகிறது

புதன்கிழமை, 29 ஜூலை 2015      இந்தியா
Image Unavailable

கொல்கத்தா: மேகாலயா மாநில தலைநகர் ஷில்லாங்கில் உள்ள ஐஐஎம் கல்வி நிறுவனத்தில் முன்னாள் ஜனாதிபதி டாக்டர் ஏ.பி.ஜே அப்துல் கலாம் உரையாற்றிக் கொண்டிருந்தபோது மயங்கி விழுந்து மரணம் அடைந்தார்.அந்த நிகழ்ச்சியில் அவரது உரை முடிக்கப்படாமலேயே இருந்ததுஅந்த உரையை கலாம் பற்றிய புதிய புத்தகத்தில் சேர்க்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் ஜனாதிபதி பதவியில் இருந்து ஓய்வு பெற்ற பின்னர் நாட்டின் உயரிய கல்வி நிறுவனங்களான ஐ.ஐ.எம் போன்றவற்றில் மாணவர்களிடையே உரையாற்றி வந்தார். அவர் சாகும் வரை மாணவர்களின் மத்தியில் எழுச்சி உரையாற்றுவதை தனது கடமையாக   கருதினார்.

இந்த மாதம் 27ம் தேதியன்று அவர் மேகாலயா தலைநகர் ஷில்லாங்கில் உள்ள ஐ.ஐ.எம் கல்வி நிறுவனத்தில் உரையாற்றத்தொடங்கிய 2நிமிடத்திலேயே மேடையில் மயங்கி விழுந்தார். அவரை அவசர சிகிச்சைக்காக அங்குள்ள பெத்தானி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர் கொண்டு வரப்படும் போதே அவரது உயிர் பிரிந்து விட்டதாக பெத்தானி மருத்துவமனை மருத்துவர்கள் தெரிவித்தனர்.

ஷில்லாங்கில் பேசுவதற்காக தயாரிக்கப்பட்ட கலாமின் உரை படிக்கப்படாமலேயே நின்று போனது. இந்த உரை விவரம் கலாம்  பற்றி வெளியாகும் புதிய புத்தகத்தில் சேர்க்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஷில்லாங்கில் ஐ.ஐ.எம் கல்வி நிறுவனத்தில் கலாம் லிவ்வபிள் பிளானட் எர்த் என்கிற தலைப்பில் உரையாற்ற உரை தயாரித்திருந்தார்.

இந்த உரை கலாம் பற்றிய புதிய புத்தகத்தில் சேர்க்கப்படும் என்று அவரது நெருங்கிய உதவியாளரான ஶ்ரீஜன் பால் சிங் தெரிவித்தார். அப்துல் கலாம் எழுதிய கட்டுரைகளை புத்தகமாக வெளியிட உரிய பதிப்பாளரை தேடுவோம் என்றும் அவர் தெரிவித்தார். சமீபத்தில் அப்துல் கலாம்  எழுத்தாளர் சிங்குடன் இணைந்து அட்வான்டேஜ் இந்தியா என்ற புத்தகத்தை எழுதியிருந்தார். அந்த புத்தகமும்  அச்சில் வருவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து