முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கலாம் இறுதிச் சடங்கில் பங்கேற்க பிரதமர் மோடி தமிழகம் வருகை

புதன்கிழமை, 29 ஜூலை 2015      இந்தியா
Image Unavailable

புதுடெல்லி: மறைந்த அப்துல் கலாமின் இறுதிச் சடங்கு நிகழ்ச்சியில் கலந்து கொள்ள பிரதமர் மோடி இன்று தமிழகம் வருகின்றார். முன்னாள் குடியரசு தலைவர் அப்துல் கலாம் கடந்த திங்கட்கிழமை மேகாலயா, ஷில்லாங்கில் நடைப்பெற்ற கருத்தரங்கில் பங்கேற்றபோது மாரடைப்பால் காலமானார். பின்னர் அவரது உடல் டெல்லிக்கு கொண்டு செல்லப்பட்டு முக்கிய தலைவர்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது.

இதனையடுத்து கலாமின் இறுதிசடங்கு அவரது குடும்பத்தாரின் வேண்டுகோளுக்கிணங்க ராமேஸ்வரத்தில் நடைபெறவுள்ளது. இதனையடுத்து அப்துல் கலாமின் உடல் டெல்லியிலிருந்து நேற்று பாதுகாப்புத் துறை அமைச்சர் மனோகர் பாரிக்கர் தலைமையிலான குழு ராமேஸ்வரம் கொண்டு வந்தது. பின் அங்கு பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது.

மத்திய அமைச்சர்கள் வெங்கையா நாயுடு, பொன். ராதாகிருஷ்ணன், மனோகர் பாரிக்கர் மற்றும் தமிழக  அமைச்சர்கள் ஓ.பன்னீர் செல்வம், நத்தம் விஸ்வநாதன், வைத்தியலிங்கம், அரசியல் தலைவர்கள் வை.கோ, தமிழிசை செளந்தராஜன், நல்லகண்ணு மற்றும் பலர் அஞ்சலி செலுத்தினர்.

இன்று நடைபெறும் இறுதிச்சடங்கில் பங்கேற்க பிரதமர் மோடி மற்றும் காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி ஆகியோர் தனித் தனித் விமானங்களில் வருகின்றனர். ராகுல் காந்தியுடன், கர்நாடக முதல்வர் சித்தராமையாவும் கலாம் இறுதிச்சடங்கில் பங்கேற்கிறார். இதே போன்று கேரள முதல்வர் உம்மன் சாண்டியும் இறுதிச் சடங்கில் பங்கேற்பார் என்று அம்மாநில அரசு தெரிவித்துள்ளது. பாண்டிச்சேரி முதல்வர் ரங்கசாமி இறுதி சடங்கில் பங்கேற்கவுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து