முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

குடியரசுத் தலைவரிடம் யாகூப் மேமன் புதிய கருணை மனு

புதன்கிழமை, 29 ஜூலை 2015      இந்தியா
Image Unavailable

புதுடெல்லி: மும்பை தொடர் குண்டுவெடிப்பு குற்றவாளி யாகூப் மேமன் தனது தூக்கு தண்டனையை ரத்து செய்யக் கோரி குடியரசுத் தலைவருக்கு நேற்று புதிய கருணை மனு ஒன்றை அனுப்பினார். கடந்த 93-ம் ஆண்டு நடந்த மும்பை தொடர் குண்டுவெடிப்பு வழக்கில் தொடர்புடைய யாகூப் மேமனுக்கு தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டு, அவரது தூக்குத் தண்டனையை சுப்ரீம் கோர்ட்டும் உறுதி செய்தது.

இதையடுத்து, நாக்பூர் மத்திய சிறையில் வரும் 30-ம் தேதி அவர் தூக்கிலிடப்பட உள்ளார். இந்நிலையில், யாகூப் மேமன் தனது தூக்கு தண்டனையை ரத்து செய்யக் கோரி குடியரசுத் தலைவருக்கு புதிய கருணை மனு ஒன்றை அனுப்பியுள்ளார்.  மரபுப்படி குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி இந்த மனுவை மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு ஆய்வுக்காக அனுப்பி வைப்பார். உள்துறை அமைச்சகத்தின் பரிந்துரைக்கேற்ப குடியரசுத் தலைவரின் முடிவு அமையும்.

கடந்த ஆண்டு யாகூப் மேமன் குடியரசுத் தலைவருக்கு கருணை மனு தாக்கல் செய்தபோது அவரது மனுவை மத்திய உள்துறை அமைச்சகத்தின் பரிந்துரையை ஏற்று குடியரசுத் தலைவர் நிராகரித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து