முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மும்பை தொடர் குண்டு வெடிப்பு குற்றவாளி யாகூப் மேமன் நாக்பூர் சிறையில் தூக்கிலிடப்பட்டார்

வியாழக்கிழமை, 30 ஜூலை 2015      இந்தியா
Image Unavailable

மும்பை: மும்பையில் குண்டு வெடிப்புகள் நடத்திய தீவிரவாதிகளுக்கு உதவிய யாகூப் மேமன் நேற்று அதிகாலை நாக்பூர் சிறைச்சாலையில் தூக்கிலிடப்பட்டார். கடந்த 1993ம்ஆண்டு மும்பையில் தீவிரவாதிகள் தொடர் குண்டு வெடிப்பு நடத்தினார்கள்.இந்த குண்டு வெடிப்பில் 257அப்பாவி மக்கள் கொல்லப்பட்டனர்.

இந்த தாக்குதலை தாவூத் இப்ராகிம், டைகர் மேமன் கூட்டாளிகள் நடத்தினார்கள். தற்போது இருவரும் வெளிநாட்டில் பதுங்கி இருக்கிறார்கள்.தாவூத் இப்ராகிம் பாகிஸ்தானில் பதுங்கி இருப்பதாக கூறப்படுகிறது. தாவூத் இப்ராகிமை பிடித்து தண்டனை அளிக்க வேண்டும் என வலியுறுத்தப்படுகிறது.

இந்த நிலையில் மும்பை தொடர்குண்டு வெடிப்பு தீவிரவாதிகளுக்கு உதவிய யாகூப் மேமன் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். அவர் நிரபராதி மரண தண்டனை விதிக்காதீர்கள் என்று யாகூப் மேமன் நீதிமன்றத்தில் வேண்டுகோள் விடுத்தார். யாகூப் மேமன் சார்பிலும் சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அவரது மனுவை உச்ச நீதிமன்றம் நிராகரித்தது.

யாகூப்மேமன் தூக்கிலிட கூடாது என்று,சமூக ஆர்வலர்கள், திரைப்பட இயக்குனர்கள் நடிகர்கள் அரசியல் தலைவர்கள்ஜனாதிபதியிடம் மனு அளித்தனர்.இந்த சூழ்நிலையில் தனக்கு மரண தண்டனை விதிக்கக்கூடாதுஎன்று டைகர் மேமன்  சுப்ரீம் கோர்ட்டில் வேண்டுகோள் மனு தாக்கல் செய்தார். இந்த மனுவைதீபக் மிஸ்ரா தலைமையிலான 3நீதிபதிகள் கொண்ட பெஞ்ச் விசாரணை செய்து மேமனின் மனுவை நிராகரித்தது.இறுதி கட்டமாக டைகர் மேமனுக்கு மரண தண்டனை விதிக்கக்கூடாது என்று சமூக ஆர்வலர்கள் சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்தார்கள்.இந்த மனு விசாரணை நேற்று அதிகாலை வரை விடிய விடிய நடந்தது.இறுதியில் டைகர்மேமனின் மரணத்தண்டனையை நீதிமன்றம் உறுதி செய்தது.

நேற்று அதிகாலை சுப்ரீம் கோர்ட்டின் மூத்த பதிவாளர் தலைமை நீதிபதி எச்.எல்.தத்து வீட்டிற்கு வந்தார். யாகூப்மேமனின் கருணை மனுவை ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி புதன் கிழமையன்று நிராகரித்தார்.இந்த நிலையில் மீண்டும் யாகூப் மேமன் சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டதால் இது குறித்து சட்ட நிபுணர்களுடன் ஜனாதிபதி ஆலோசனை செய்தார்.நேற்றுமுன்தினம் இரவு மத்திய உள்துறை அமைச்சர் ராஜ் நாத் சிங் ஜனாதிபதியை சந்தித்து யாகூப் மேமனின் தூக்குத்தண்டனை குறித்து விவாதித்தார்.யாகூப் மேமனின் மனு தொடர்பாக அவருக்கு தண்டனையை குறைக்கக்கூடாது என்று அட்டர்னி ஜெனரல் நீதிமன்றத்தில் தெரிவித்தார்.நேற்று அதிகாலை  யாகூப் மேமனின் கருணை மனுவை  சுப்ரீம் கோர்ட் நிராகரித்து மரணதண்டனையை நிறைவேற்ற உத்தரவிட்டது.

யாகூப்மேமனின் தூக்குதண்டனை நேற்று அதிகாலை 6.35மணிக்குறைவேற்றப்பட்டது.பின்னர் அவரது உடல் மும்பையில் உள்ள மாகிம் பகுதிக்கு கொண்டு வரப்பட்டு அங்கு அடக்கம் செய்யப்பட்டது.அவருக்கு மரண தண்டனை விதிக்கப்படுவதற்கு முன்னர் அதிகாலை 3.30மணிக்கு மிதமான வென்னீரில் குளிக்க அனுமதிக்கப்பட்டார்.  அதனைத்தொடர்ந்து அவருக்கு புதிய உடைகள் தரப்பட்டன. நாக்பூர் மத்திய சிறையில் மேமனுக்காக நமாசும் குரானை படிக்கவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டன.

அதிகாலை 6.35மணிக்கு யாகூப் மேமன் தூக்கிலிடப்பட்டார் .நேற்று மேமனுக்கு 54வது பிறந்த நாளாகும்.அதே நாளில் அவருக்கு மரண தண்டனையும் நிறைவேற்றப்பட்டது. யாகூப் மேமன் பல்வேறு நீதிமன்றங்களில் விடுத்த வேண்டுகோள் மனுக்கள் நிராகரிக்கப்பட்டு அவருக்கு மரணத்தண்டனை நிறைவேற்றப்பட்டது.யாகூப் மேமன் இறந்ததாக மருத்துவ குழுவினர் அறிவித்த பின்னர் அவரது உடல் தூக்கு கயிற்றில் இருந்து எடுக்கப்பட்டது. பின்னர் அவரது உடல் பிரேத பரிசோதனை நாக்பூர் அரசு மருத்துவமனையில் நடைபெற்றது.

மகாராஷ்டிரா மாநிலத்தின் முதல்வரும் மாநில  உள்துறை இலாகாவை வகிப்பவருமான  தேவந்திர பட்னாவிஸ் காலை 11மணிக்கு மாநில சட்டமன்றத்தில் யாகூப் மேமனுக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டதை அறிவித்தார்.யாகூப் மேமனுக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றப்படும்போது அவரது உறவினர்கள் சிறை வளாகத்தில் இருப்பதற்கு அனுமதிக்கப்படவில்லை. யாகூப் மேமனின் உடல் அவரது சகோதரர் சுலைமான் மேமனிடமும் அவரது உறவினர் உஸ்மானிடமும் ஒப்படைக்கப்பட்டது.

யாகூப் மேமனின் மரணதண்டனை நிறைவேற்றப்பட்ட சிறை முன்பாக ஏராளமான தொலைக்காட்சிகளின் வாகனங்கள் நின்றன. யாகூப் மேமனுக்கு தூக்குதண்டனை நிறைவேற்றப்படுவதற்கு முன்னர் அதிகாலை 2.13மணிக்கு மூடப்பட்ட உறை சுலைமானிடம் தரப்பட்டது. யாகூப் மேமன் தண்டனை நாளில் நாக்பூரில் எந்த வித பேரணியும் நடத்தக்கூடாது என்று போலீசார் தடை விதித்திருந்தனர். யாகூப்மேமனின் தூக்குதண்டனையை ஒரு மாஜிஸ்திரேட் பார்வையிட்டார். அவருக்கு தண்டனை நிறைவேற்றப்பட்ட நிகழ்வு வீடியோ படமாக்கப்பட்டது.

யாகூப் மேமனின் வழக்கறிஞரான அனில் கெடம் கூறுகையில் யாகூப்பின் உடலை அவரது குடும்பத்தினரிடம் ஒப்படைக்க வேண்டும்.அவர்கள் மும்பையில் இறுதி சடங்கு செய்வார்கள் என்று தெரிவித்தார்.யாகூப் மேமனின் உடல் போலீஸ் பாதுகாப்புடன் வேனில் நாக்பூர் விமான நிலையத்திற்கு எடுத்துச்செல்லப்பட்டது. இந்த சூழ்நிலையில் மும்பையில் உள்ள யாகூப் மேமனின் வீட்டிற்கு முன்பாக ஏராளமானவர்கள் கூடியிருந்தனர்.அவரதுஉடல் மதியம் 12.30மணிக்கு மும்பை சென்றடைந்தது.மும்பையில் பதட்ட நிலை ஏற்படக்கூடாது என சிவாஜி பூங்காவில் உள்ள சிவ சேனை அலுவலகம் முன்பாக பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.யாகூப் குடும்பத்தினர் வசிக்கும் மும்பை மாகிம் பகுதியில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.மும்பை விமான நிலையத்திலும் பாதுகாப்பு பணியில் போலீசார் குவிக்கப்பட்டிருந்தார்கள்.யாகூப்பின் உடல் நேற்று மதியம் 1மணிக்கு அவரது வீட்டிற்கு வந்தது. அவரது உடலுடன் குடும்பத்தினரும் வந்தனர்.

யாகூப் மேமனின் உடலை பத்திரிகையாளர்கள் தொலைக்காட்சிகள் படம் பிடிக்கக்கூடாது என போலீசார் கடும் உத்தரவு பிறப்பித்திருந்தனர்.மேமனின் மறைவை யொட்டி எந்த பேரணியும் நடத்தக்கூடாது என்று போலீசார் மாகிம் பகுதியில் தொடர்ந்து அறிவிப்பு செய்த வண்ணம் இருந்தார்கள்.யாகூப் மேமனின் உடல் புதைக்கப்படும் படா கபர்ஸ்தான் சாலைப்பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டிருந்தார்கள்.அவரது உடல் சந்தன் வாடி மயானத்தில் புதைக்கப்பட்டது.சுப்ரீம் கோர்ட் யாகூப்பின் கருணை மனுவை அதிகாலை 5மணிக்கு நிராகரித்தது. அதன் பின்னர் மாலை 6.35மணிக்கு யாகூப்பிற்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து