முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

யாகூப் மேம்னின் கடைசி ஆசை: நிறைவேற்றிய அதிகாரிகள்

வியாழக்கிழமை, 30 ஜூலை 2015      இந்தியா
Image Unavailable

நாக்பூர் - மும்பை தொடர் குண்டுவெடிப்பு வழக்கில் தூக்கிலிடப்பட்ட யாகூப் மேமனின் கடைசி ஆசையை சிறை அதிகாரிகள் நிறைவேற்றி வைத்துள்ளனர்.  1993ம் ஆண்டு மும்பையில் 13 இடங்களில் குண்டு வெடித்த வழக்கில் யாகூப் மேமனுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. நாக்பூர் மத்திய சிறையில் நேற்று அவர் தூக்கிலிடப்பட்டார். தூக்கிலிடப்படும் முன்பு அவரிடம் சிறை அதிகாரிகள் உங்களின் கடைசி ஆசை என்ன என்று கேட்டுள்ளனர்.

அதற்கு அவர் என் மகளுடன் பேச வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.  இதையடுத்து சிறை அதிகாரிகள் மேமன் தனது 21 வயது மகளுடன் போனில் பேச ஏற்பாடு செய்துள்ளனர். மகளுடன் பேசிய பிறகு அவர் மிகவும் மகிழ்ச்சி அடைந்ததாக அவரின் சகோதரர் தெரிவித்துள்ளார். யாகூப் மேமனின் உடல் பிரேத பரிசோதனைக்கு பிறகு அவரின் குடும்பத்தாரிடம் ஒப்படைக்கப்பட்டது.

நாக்பூர் மத்திய சிறையில் கடந்த 31 ஆண்டுகளில் தூக்கிலிடப்பட்ட முதல் நபர் யாகூப் மேமன் என்பது குறிப்பிடத்தக்கது. மேமனை தூக்கிலிட்டதற்கு ஆதரவாகவும், எதிர்ப்பு தெரிவித்தும் மக்கள் சமூக வலைதளங்களில் கருத்து தெரிவித்துள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து