முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

யாகூப் மேமன் தூக்கு தண்டனை நிறைவேற்றம் வருத்தம் அளிக்கிறது: சசி தரூர்

வியாழக்கிழமை, 30 ஜூலை 2015      இந்தியா
Image Unavailable

டெல்லி - மும்பை தொடர் குண்டுவெடிப்பு வழக்கில் யாகூப் மேமனுக்கு தூக்கு நிறைவேற்றப்பட்டது வருத்தம் அளிப்பதாக முன்னாள் மத்திய அமைச்சர் சசி தரூர் தெரிவித்துள்ளார்.  மும்பை தொடர் குண்டுவெடிப்பு வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்ட யாகூப் மேமன் நாக்பூர் சிறையில் நேற்று அதிகாலை தூக்கிலிடப்பட்டார். இந்நிலையில் யாகூப் தூக்கிலிடப்பட்டதை அறிந்து முன்னாள் மத்திய அமைச்சர் சசி தரூர் வருத்தம் அடைந்துள்ளார்.

இது குறித்து அவர் ட்விட்டரில் கூறியிருப்பதாவது, ஒரு மனிதரை நம் அரசு தூக்கிலிட்டுள்ளது என்ற செய்தி வருத்தம் அளிக்கிறது. மாநில அரசு ஆதரவுடன் நடக்கும் கொலை நம்மையும் கொலைகாரர்களாக ஆக்கியுள்ளது. மரண தண்டனை எதையும் தடுக்கும் என்பதற்கு ஆதாரம் இல்லை. எதிர்மாறாக தான் நடக்கும், அது தான் உண்மை. பழிவாங்கும் எண்ணம் தான் இருக்கும், இது அரசுக்கு தேவை இல்லாதது.  நாம் நிச்சயம் தீவிரவாதத்தை எதிர்த்து போராட வேண்டும்.

ஆனால் மரண தண்டனை எந்த இடத்திலும் தீவிரவாத தாக்குதலை எப்பொழுதுமே தடுத்து நிறுத்தியது இல்லை. நான் எந்த வழக்குப் பற்றியும் கருத்து தெரிவிக்கவில்லை. அதை சுப்ரீம் கோர்ட் தான் முடிவு செய்ய வேண்டும். மரண தண்டனை கொள்கை மற்றும் நடைமுறையில் இருப்பது தான் பிரச்சனை. என்று தெரிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago
View all comments

வாசகர் கருத்து