முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கேரள தொழில்நுட்ப பல்கலைக் கழகத்துக்கு கலாம் பெயர்: உம்மன்சாண்டி அறிவிப்பு

வியாழக்கிழமை, 30 ஜூலை 2015      இந்தியா
Image Unavailable

திருவனந்தபுரம் - கேரள தொழில்நுட்ப பல்கலைக்கழகத்துக்கு மறைந்த மக்கள் ஜனாதிபதி அப்துல்கலாமின் பெயர் சூட்டப்படும் என அம்மாநில முதல்வர் உம்மன் சாண்டி அறிவித்துள்ளார்.  2020ல் இந்தியாவை வல்லரசாக்க கனவு காணச் சொல்லி ஊக்கப் படுத்திய கலாமின் திடீர் மரணத்தால் இந்தியர்கள் சோகத்தில் மூழ்கியுள்ளனர். இந்நிலையில், கேரள தொழில்நுட்ப பல்கலைக்கழகத்திற்கு கலாமின் பெயர் சூட்டப் படும் என கேரள முதல்வர் உம்மன்சாண்டி அறிவித்துள்ளார். 

கேரள சட்டசபையில் இது தொடர்பாக மேலும் அவர் கூறியதாவது:- முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் இந்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்ப துறை முன்னேற்றத்துக்கு முக்கிய பங்காற்றி உள்ளார். ஒரு விஞ்ஞானியாக கேரள மாநிலத்தில் சுமார் 20 ஆண்டுகளுக்கும் மேலாக கலாம் பணிபுரிந்து இருக்கிறார். 

எனவே அவரை கவுரவப்படுத்தும் வகையில் கேரள தொழில்நுட்ப பல்கலைக்கழகத்துக்கு டாக்டர் ஏ.பி.ஜே.அப்துல் கலாம் தொழில்நுட்ப பல்கலைக்கழகம் என பெயரிட முடிவு செய்துள்ளோம்.  பொதுமக்கள் அஞ்சலி செலுத்துவதற்காக அப்துல் கலாமின் உடலை கேரளாவுக்கு கொண்டு வர வேண்டும் என்று மத்திய அரசிடம் கோரிக்கை விடுத்தோம். ஆனால் சில தொழில்நுட்பம் காரணமாக மத்திய அரசு எங்கள் கோரிக்கையை நிராகரித்து விட்டது' என இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து