முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

விபத்துக்குள்ளான விமான பாகம் கண்டு பிடிக்கப்பட்டுள்ளதா? ஆய்வு செய்ய மலேசிய குழு விரைவு

வியாழக்கிழமை, 30 ஜூலை 2015      உலகம்
Image Unavailable

ஐக்கிய நாடுகள் சபை: பிரெஞ்சு இந்திய கடல் பகுதியில் உள்ள லா ரீயூனியன் தீவில் விமானத்தின் பாகங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.அந்த விமான பாகங்கள் மாயமானதங்கள் மலேசிய நாட்டின் விமானத்தின் பாகங்களா என கண்டறிய அந்த நாட்டுக்குழு ஒன்று அந்த இடத்திற்கு விரைந்துள்ளது.

மலேசியா நாட்டைச்சேர்ந்த எம்,எச் 370என்ற விமானம் கடந்த ஆண்டு மார்ச் மாதம் 8ம் தேதி வானில் பறக்கும் போதே மாயமானது.அந்த விமானம் விபத்துக்குள்ளாகி இருக்கலாம் என்று தேடுதல் வேட்டைகடந்த ஆண்டு முதல்  நடைபெற்று வருகிறது. மாயமான விமானத்தில் 239பேர் இருந்தனர்.

அந்தவிமானத்தின் பாகங்கள் பிரெஞ்சு தீவான லா ரீயூனியன் பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தகவல் வந்துள்ளது என மலேசிய போக்குவரத்து துறை அமைச்சர் லியோ தியோங் நேற்று தெரிவித்தார். கடந்த 2014ம் ஆண்ட மார்ச் 8ம்தேதியன்று மலேசியாவின் போயிங் விமானம் கோலாலம்பூரில் இருந்து சீன தலைநகர் பெய்ஜிங்கிற்கு சென்றது.அந்த விமானம் கோலாலம்பூரில் இருந்து புறப்பட்ட ஒரு மணிநேரத்தில் மாயமாக மறைந்தது.

அந்த விமானத்தில் 5 இந்தியர் மற்றும் ஒரு இந்திய கனடியர் உள்பட 239 பேர் இருந்தார்கள்.லாரீயூனியன் பகுதியில் கண்டெடுக்கப்பட்டுள்ள விமான பாகம் மாயமான மலேசிய விமானத்தின் பாகங்களா என கண்டறிய ஒருகுழுவை விசாரணை செய்வதற்கு அனுப்பியுள்ளோம் என்று மலேசிய போக்குவரத்து துறை அமைச்சர் தெரிவித்தார். மாயமான மலேசிய விமானத்தில் பயணம் செய்த அனைவரும் மரணம்அடைந்திருக்கலாம் என கருதப்படுகிறது என மலேசிய நிர்வாகத்தினர் இந்த ஆண்டு ஜனவரிமாதம் அறிவித்தது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து