முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மும்பை தாக்குதல் வழக்கு: மேமன் வழக்கு கடந்து வந்த பாதை

வியாழக்கிழமை, 30 ஜூலை 2015      இந்தியா
Image Unavailable

நாக்பூர் - மும்பை தொடர் குண்டுவெடிப்பு வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட யாகூப் மேமனுக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது.குண்டு வெடிப்பு நடந்த 93-ம் ஆண்டில் இருந்து தூக்கிலிடப்பட்ட நேற்று வரை மேமன் கடந்துவதந்த பாதை விவரம்
1993 மார்ச் 12:
மும்பையில் 13 இடங்களில் நிகழ்ந்த தொடர்குண்டு வெடிப்பில் 257 பேர் கொல்லப்பட்டனர். மேலும் 713 பேர் காயமடைந்தனர்.
1993 ஏப்ரல் 19:
மும்பை குண்டுவெடிப்பு வழக்கில் நடிகர் சஞ்சய் தத் கைது செய்யப்பட்டார்.
1993 நவம்பர் 4:
சஞ்சய் தத் உட்பட 189 பேருக்கு எதிராக 10 ஆயிரம் பக்க முதல்நிலை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.
1993 நவம்பர் 19:
இந்த வழக்கு சிபிஐ வசம் ஒப்படைக்கப்பட்டது.
1994 ஏப்ரல் 1:
இந்த வழக்கை விசாரித்த தடா நீதிமன்றம், செஷன்ஸ் நீதிமன்ற வளாகத்திலிருந்து ஆர்த்தர் சாலை மத்திய சிறை வளாகத்துக்கு மாற்றப்பட்டது.
2003 செப்டம்பர்:
விசாரணை முடிந்து தீர்ப்பு ஒத்திவைக்கப் பட்டது.
2006 ஆகஸ்ட் 10:
செப்டம்பர் 12-ல் தீர்ப்பு வெளியாகும் என நீதிபதி பி.டி.கோடே அறிவித்தார்.
2006 செப்டம்பர் 12:
தீர்ப்பு வழங்கப்பட்டது. இதில் மேமன் குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் குற்றவாளி என்று அறிவிக்கப்பட்ட னர். யாகூப் உட்பட 12 பேருக்கு மரண தண்டனையும் 20 பேருக்கு ஆயுள் தண்டனையும் வழங்கப்பட் டது. 3 பேர் விடுவிக்கப்பட்டனர்.
2011 நவம்பர் 1:
100 குற்றவாளிகள் தரப்பிலும் அரசு சார்பிலும் தாக்கல் செய்த மேல் முறையீட்டு மனு மீதான விசாரணை உச்ச நீதிமன்றத்தில் தொடங்கியது.
2012 ஆகஸ்ட் 29:
விசாரணை முடிந்து தீர்ப்பு ஒத்திவைக்கப் பட்டது.
2013 மார்ச் 21:
யாகூப் மேமனின் மரண தண்டனை உறுதி செய்து தீர்ப்பு வழங்கப்பட்டது. 10 பேரின் மரண தண்டனை ஆயுளாகக் குறைக்கப்பட்டது.
2013 ஜூலை 30:
யாகூப் மேமனின் முதல் மறு ஆய்வு மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
2014 ஏப்ரல் 11:
யாகூப் மேமனின் கருணை மனுவை குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி நிராகரித்தார்.
2014 ஜூன் 2:
மேமனின் 2-வது மறு ஆய்வு மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், மரண தண்டனையை நிறைவேற்ற இடைக்கால தடை விதித்தது.
2015 ஏப்ரல் 9:
மறு ஆய்வு மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
2015 ஜூலை 21:
சீராய்வு மனுவை (கடைசி வாய்ப்பு) உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
2015 ஜூலை 23:
சட்ட நடைமுறைகள் முறையாக பின்பற்றப்படாததால், ஜூலை 30-ல் மரண தண்டனையை நிறைவேற்ற தடை விதிக்க வேண்டும் எனக் கோரி உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல்.
2015 ஜூலை 28:
நீதிபதிகள் மாறுபட்ட தீர்ப்பு வழங்கியதால் கூடுதல் நீதிபதிகள் அமர்வுக்கு மாற்றப்பட்டது.
2015 ஜூலை 29:
சட்ட நடைமுறைகள் சரியாக பின்பற்றப்பட்டுள்ளதாகக் கூறி யாகூப் மேமன் மனுவை உச்ச நீதிமன்றம் நிராகரித்தது.
2015 ஜூலை 30:
மும்பை குண்டுவெடிப்பு வழக்கின் குற்றவாளி யாகூப் மேமன் அதிகாலை 6.35 மணியளவில் நாக்பூர் சிறையில் தூக்கிலிடப்பட்டார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து