முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நேபாளத்தில் நிலச்சரிவு: 2 கிராமமே புதையுண்டதில் 30 பேர் பலி

வியாழக்கிழமை, 30 ஜூலை 2015      உலகம்
Image Unavailable

காத்மண்டு - நேபாளத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி பெண்கள் உள்பட 30 பேர் பலியாகினர். மேலும் ஏராளமானோர் மாயமானதால், பலி எண்ணிக் உயரக்கூடும் என அஞ்சப்படுகிறது. கடந்த ஏப்ரல் 25-ம் தேதி அன்று ரிக்டர் அளவில் 7.8 ஆக பதிவான நிலநடுக்கத்தால் பிரம்மாண்ட கட்டடங்களும் தரைமட்டமாகி சுமார் 7 ஆயிரத்திக்கும் அதிகமானோர் உயிரிழந்தனர். 14 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

இந்நிலையில் செவ்வாய் கிழமை நள்ளிரவில் கனமழையால் காத்மண்டு நகரில் கடும் நிலச்சரிவில் ஏற்பட்டது. இதில் இரண்டு கிராமங்களை அழித்துவிட்டது. இதனால் காத்மாண்டுவின் மேற்கே 127 கி.மீ. தொலைவில் உள்ள போக்காரா உள்ளிட்ட கிராமங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. மழையின் தொடர்ச்சியாக புதன்கிழமை நள்ளிரவில் அங்கே நிலச்சரிவும் ஏற்பட்டது. இதில் சுமார் 30 பேர் பலியாகியிருக்கலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

மேலும் பலரைக் காணவில்லை. இதில் 22 வீடுகள் சேதமடைந்ததாக அந்நாட்டு அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர் லஷ்மி தக்கல் தெரிவித்தார். ஜூன் முதல் செப்டம்பர் மாதம் வரை மழை பெய்யும் பருவம் என்பதால் அங்கே கடும் மழை கொட்டித் தீர்த்து வருகிறது. மலைப்பகுதிகளில் நிலச்சரிவு ஏற்படும் அபாயம் அதிகரித்துள்ளது.மக்கள் உறங்கிக் கொண்டிருந்தபோது நிலச்சரிவு ஏற்பட்டுள்ளதால் பலி எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல் ராணுவ வீரர்களும், போலீசாரும் புதையுண்ட மக்களைத் தேடும் பணியில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர்.இதனிடையே மீட்புப் பணிகளில் நேபாள அரசு மெத்தனம் காட்டுவதாக பொதுமக்கள் தரப்பில் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago
View all comments

வாசகர் கருத்து