முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பஞ்சாப் தீவிரவாதிகள் தாக்குதல் குறித்து மக்களவையில் ராஜ் நாத்சிங் அறிக்கை தாக்கல் செய்தார்

வெள்ளிக்கிழமை, 31 ஜூலை 2015      இந்தியா
Image Unavailable

புதுடெல்லி - பஞ்சாப்பில் உள்ள குர்தாஸ் பூர் தாக்குதல் குறித்த அறிக் கையை மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் நேற்றுமக்களவையில் அறிக் கை தாக்கல் செய்தார். அவரது உரைக்கு பின்னர் நேற்றும் மக்களவை மற்றும் மாநிலங்களவை நடவடிக் கைகள் முடங்கின. லலித் மோடி விவகாரம் மற்றும் வியாபம் முறைகேடு தொடர்பாக இரு அவைகளும்நாள் முழுவதும் ஒத்தி வைக்கப்பட்டது. பாராளுமன்றம் நேற்று கூடியதும் மக்களவையில் உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் குர்தாஸ் பூரில்  தீவிரவாதிகள் நடத்திய தாக்குதல் குறித்து அறிக் கை தாக்கல் செய்தார். அப்போது அவர் கூறுகையில் முந்தைய அரசு இந்து தீவிர வாதம் என்ற வார்த்தையை உருவாக்கியது.

அந்த  அரசு விசாரணையை திசைதிருப்பும் விதமாக செயல்பட்டது.குர்தாஸ்பூர் தாக்குதல் குறித்து அறிக் கை தாக்கல் செய்வதற்கு முன்பாக அவர் இந்த விவகாரம் தொடர்பாக மாநிலங்களவையில் முந்தைய தினம் பேசினார்.அப்போது எதிர் கட்சியினர் அமளியில் ஈடுபட்டார்கள். மக்களவையில் குர்தாஸ்பூர் தாக்குதல் குறித்து உள்துறை அமைச்சர் அறிக்கை தாக்கல் செய்த போது காங்கிரசார் அமளியில் ஈடுபடாமல் அவை இருக் கையில் அமர்ந்து இருந்தனர்.காங்கிரஸ் எம்பிக்கள் தங்கள் இருக் கையில் இருக்குமாறு அந்த கட்சியின் தலைவர் மல்லிகார்ஜூன் கார்கே கேட்டுக் கொண்டார்.இதனைத்தொடர்ந்து காங்கிரஸ் கட்சியினர் அமைதியாக இருந்தார்கள்.

அமைச்சர் ராஜ் நாத் சிங் அறிக்கையை நிறைவு செய்ததும் மீண்டும் காங்கிரஸ் உறுப்பினர்கள் சபா நாயகர் இருக்கை அருகே முற்றுகையிட்டு அமளியில் ஈடுபட்டார்கள். மழைக்கால கூட்டத்தொடர் கடந்த 21ம் தேதி துவங்கியதில் இருந்து பாராளுமன்றத்தின் இரு அவைகளும் எந்த வித நடவடிக் கைகளும் நடக்காமல் முடங்கி வருகின்றன.ஐ.பிஎல் முன்னாள் தலைவர் லலித் மோடி விவகாரம் தொடர்பாகவும் மத்திய பிரதேச மாநில தொழில் முறை தேர்வு வாரியம்(வியாபம் ) முறைகேடு தொடர்பாகவும் காங்கிரஸ் கட்சி உள்ளிட்ட எதிர் கட்சியினர் அமளியில் ஈடுபட்டு வருகிறார்கள். நாட்டின் மிகப்பெரிய அச்சுறுத்தலாக தீவிரவாதம் இருக்கிறது இந்த விஷயத்தில்பாராளுமன்றமோ அல்லது தேசமோ மாறுபட்ட கருத்தை கொண்டிருக்க கூடாது நாம் ஒன்று பட்டு பாடுபடவேண்டும். ஒரு புறம்தீவிரவாதத்திற்கு எதிராக போராடும் நமது ஜவான்கள் தியாகம் செய்து வருகிறார்கள். ஆனால் இதே நேரத்தில் மற்றொரு புறத்தில் கூச்சலையும் இடையூறுகளை சந்திக்கிறோம்.

இதனை இந்த தேசம் எப்படி ஒப்புக் கொள்ளும் என ராஜ் நாத் சிங் தனது உரையின்போது குறிப்பிட்டார்.இவ்விவகாரம் தொடர்பாக கேட்கப்படும் எந்த கேள்விக்கும் பதிலளிக்க நான் தயாராக இருக்கிறேன்.ஆனால் உரிய முறையில் அவர்கள் விவாதம் நடத்துவதற்கு நோட்டீஸ் அளிக்க வேண்டும்.கடந்த 2013ம்ஆண்டு அப்போதைய உள்துறை அமைச்சர்ப.சிதம்பரம் இந்து தீவிரவாதம் என்ற வார்த்தையை உருவாக்கினார் .விசாரணையை திசை திருப்புவதற்காக அவர் இவ்வாறு கூறினார்.இதனால் நமது போராட்டம் வலுவிழந்தது.அப்போது லஷ்கர் இ தொய்பா நிறுவனர்ஹபீஸ் சயீத்(பாகிஸ்தான்) முந்தைய உள்துறை அமைச்சரை பாராட்டினார்.அதேப்போன்ற வெட்ககேடான நிலமை மீண்டும் ஏற்பட எங்களது அரசு அனுமதிக்காதுஎன்று ராஜ் நாத் சிங் தெரிவித்தார்.

அப்போது காங்கிரஸ் உறுப்பினர்கள் பதிலடி தர முயன்றபோது சபாநாயகர் சுமித்ரா மகாஜன் அதனை அனுமதிக்கவில்லை.அப்போது காங்கிரஸ் உறுப்பினர்கள் ஆத்திரம் அடைந்து சட்ட விதி புத்தகத்தை காட்டி தங்கள் கருத்தை தெரிவிக்க முயன்றனர்.காங்கிரஸ் உறுப்பினர்கள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டதால் அவையில் கூச்சலும் குழப்பமும் நிலவியது. மல்லிகார்ஜூன் கார்கே பேசுவதற்கு அனுமதி அளிக்க வேண்டும் என வலியுறுத்தினார்கள்.கடந்த ஒருவாரமாக பாராளுமன்றம் எந்த வித நடவடிக் கைகளும் இல்லாமல் முடங்கி வருகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து