முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தமிழகத்தில் 18.8 சதவீதம் தாய்மார்கள் மட்டுமே தாய்ப்பால் ஊட்டுகிறார்கள்: யுனிசெப் நிறுவனம் ஆய்வில் தகவல்

வெள்ளிக்கிழமை, 31 ஜூலை 2015      தமிழகம்
Image Unavailable

சென்னை, தமிழகத்தில் 18.8 சதவீதம் தாய்மார்கள் மட்டுமே குழந்தைகளுக்கு தாய்ப்பால் ஊட்டுகிறார்கள் என்று ‘யுனிசெப்’ நிறுவனம் செய்த ஆய்வில் தெரியவந்துள்ளது.

பிறந்த குழந்தைகளுக்கு முதல் 6 மாதங்களுக்கு தேவையான அனைத்தையும் தரும் சிறந்த உணவு தாய்ப்பால் தான். இதன்மூலம் குழந்தைகளுக்கு நோய் எதிர்ப்பு சக்தி கிடைக்கும்.ஆனால் குழந்தைகளுக்கு தாய்ப்பால் கொடுத்தால் தன்னுடைய அழகு போய்விடும் என்ற தவறான கருத்தும் ஒரு சில பெண்களிடம் உள்ளது. அதுமட்டுமின்றி வேலைக்கு செல்லும் பெண்களின் எண்ணிக்கை அதிகரித்திருப்பதாலும் தாய்ப்பால் ஊட்டும் பெண்களின் எண்ணிக்கையும் குறைந்து வருகிறது.

இதனை மேம்படுத்துவதற்காக ஒவ்வொரு ஆண்டும் உலக தாய்ப்பால் வாரம் ஆகஸ்ட் மாதம் 1-ந்தேதி முதல் 7-ந்தேதி வரை அனுசரிக்கப்படுகிறது. இந்த நாட்களில் பெண்களுக்கு தாய்ப்பால் ஊட்டுவதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு அளிக்கப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு ‘பணிபுரியும் பெண்களும், தாய்ப்பாலூட்டலும்’ என்பதை மையமாக வைத்து விழிப்புணர்வு அளிக்கப்படுகிறது.

மத்திய குழந்தைகள் மற்றும் மகளிர் நல அமைச்சகம் ஆய்வு நடத்தியதில் நாடு முழுவதும் 64 சதவீதம் பெண்கள் மட்டுமே தாய்ப்பால் ஊட்டுகின்றனர் என்பது தெரியவந்துள்ளது. ஆனால் தமிழகத்தில் 18.8 சதவீதம் பெண்கள் மட்டுமே தாய்ப்பால் ஊட்டுகின்றனர் என்றும் அந்த ஆய்வில் தெரியவந்துள்ளது.

குழந்தைகளுக்கு தாய்ப்பால் ஊட்டும் பெண்கள் குறித்து ‘யுனிசெப்’ நிறுவனம் ஆய்வு செய்து சில தகவல்களை வெளியிட்டுள்ளது. அதில் கூறப்பட்டிருப்பதாவது:-

இந்திய அளவில் குழந்தைகளுக்கு தாய்ப்பாலூட்டும் பெண்களின் எண்ணிக்கையோடு ஒப்பிடுகையில் தமிழ்நாட்டில் மிகவும் குறைந்துள்ளது. பெண் கல்வி சதவிகிதம் மிகவும் குறைவாக உள்ள ஜார்கண்ட் மாநிலத்தில் 50 சதவீதம் தாய்மார்கள் குழந்தைகளுக்கு தாய்ப்பால் மட்டுமே கொடுக்கின்றனர்.

தாய்ப்பால் கொடுப்பதன் மூலம் 5 வயதுக்குள் நடக்கும் 13 சதவீதம் இறப்புகளை குறைக்க முடியும். அவ்வாறு பார்த்தால் தமிழகத்தில் ஒரு ஆண்டுக்கு 3,600 குழந்தைகளின் இறப்பை தவிர்க்க முடியும்.

தமிழ்நாட்டில் சராசரியாக 18.8 சதவீதம் பேர் மட்டுமே தாய்ப்பால் வழங்குகின்றனர். குறிப்பாக சென்னையில் 7 சதவீதமும், திருவாரூர், தேனி மாவட்டங்களில் 10 சதவீதம், ஈரோடு 12 சதவீதம், தஞ்சாவூர் 13 சதவீதம், கன்னியாகுமரி மாவட்டம் 35 சதவீதம் உள்ளது. 2007-08ம் ஆண்டு 22.4 சதவீதமாக இருந்த தாய்ப்பால் ஊட்டும் வழக்கம் 2012-2013ம் ஆண்டு 18.8 சதவீதமாக குறைந்தது.

இதுகுறித்து ‘யுனிசெப்’ நிறுவனத்தின் தமிழ்நாடு மற்றும் கேரளா மாநில தலைவர் ஜோப் சக்கரியா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

தமிழகத்தில் தாய்ப்பால் ஊட்டுவதின் நன்மைகள், அவசியம் குறித்து விழிப்புணர்வு அளிக்க வேண்டும். குறிப்பாக கிராம மற்றும் நகர்ப்புறங்களில் உள்ள பணியிடங்களில் குழந்தைகளுக்கு தாய்ப்பாலூட்டும் பழக்கத்தை ஊக்குவிக்க வேண்டும். சர்வதேச தொழிலாளர் நிறுவன உடன்படிக்கைபடி கர்ப்பமுற்ற மற்றும் பாலூட்டும் தாய்மார்களுக்கு 14 வார சம்பளத்துடன் கூடிய விடுமுறையும், பணி நேரத்தில் தாய்ப்பாலூட்ட இடைவேளையும், குறைக்கப்பட்ட பணிநேரமும் வழங்க வேண்டும்.பணியிடங்கள் அனைத்திலும் குழந்தைகளுக்கான காப்பகங்களை அமைப்பதுடன், பாலூட்டும் தாய்மார்களுக்கு தங்களது தாய்பாலை பிரித்தெடுக்கவும், சேமித்து வைக்கவும் தனி இடங்களை உருவாக்கி தர வேண்டும்.

இவ்வாறு அந்த அறிக்கையில் கூறி உள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து