முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நடிகை பரவை முனியம்மாவுக்கு முதல்வர் ஜெயலலிதா நிதி உதவி

சனிக்கிழமை, 1 ஆகஸ்ட் 2015      தமிழகம்

சென்னை: தி்ரைப்பட நடிகை பரவை முனியம்மாவின் ஏழ்மை நிலை கருதி அவருக்கு ரூ 6 லட்சமும் குடும்பச்செலவுக்காக மாதம் ரூ 6 ஆயிரமும் எம்.ஜி.ஆர் அறக்கட்டளை மூலம் வழங்க முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். இது குறித்து அதிமுக தலைமைக்கழகம் வெளியிட்ட செய்திக்குறிப்பு வருமாறு: :

பிரபல நாட்டுப்புறப் பாடகியும், திரைப்பட நடிகையுமான திருமதி பரவை முனியம்மா அவர்கள் தனது குடும்பத்தின் ஏழ்மை காரணமாகவும், தன் முதுமை காரணமாகவும் தனக்கு ஏற்பட்டுள்ள வறுமைச் சூழலை விவரித்து, தன்னை இத்தகைய சூழலில் இருந்து காப்பாற்றி, தனக்கும், தனது குடும்பத்திற்கும் மறு வாழ்வு தருகின்ற வள்ளலாக முதல்வர் ஜெயலலிதா மட்டும் தான் இருக்க முடியும் என்று நம்பிக்கை தெரிவித்து பேட்டி அளித்திருந்தார்.

பரவை முனியம்மாவின் ஏழ்மை நிலையையும், இயலாமையையும் உடனடியாகக் கண்ணுற்ற, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகப் பொதுச் செயலாளர், தமிழ் நாடு முதலமைச்சர் ஜெயலலிதா, பரவை முனியம்மாவுக்கு ரூ 6,லட்சம் நிதியுதவியும், குடும்ப செலவுகளுக்கென்று மாதந்தோறும் 6,ஆயிரம் ரூபாயும் ``புரட்சித் தலைவர் டாக்டர் எம்.ஜி.ஆர். அறக்கட்டளை''யில் இருந்து வழங்க ஆணையிட்டுள்ளார்.

மேலும், மதுரை, தனியார் மருத்துவமனையில் தற்போது சிகிச்சை பெற்று வரும் பரவை முனியம்மா அவர்களின் மருத்துவ சிகிச்சைக்குத் தேவையான நிதியுதவியை ``புரட்சித் தலைவர் டாக்டர் எம்.ஜி.ஆர். அறக்கட்டளை''யே ஏற்கும் என்றும் அறிவித்துள்ளார்.  இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. .

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

வாசகர் கருத்து

1 கருத்துகள்

  1. Anonymous August 2, 10:47

    மற்றவர்கள் செய்வதை பார்த்து செய்வது உதவி அல்ல... தானாக செய்வது தான் உதவி...

    Reply to this comment
    View all comments

    வாசகர் கருத்து