முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

100 ஸ்மார்ட் நகரங்கள் திட்டத்துக்கு ரூ.50 ஆயிரம் கோடி ஒதுக்கீடு மத்திய அமைச்சர் வெங்கய்ய நாயுடு தகவல்

ஞாயிற்றுக்கிழமை, 2 ஆகஸ்ட் 2015      இந்தியா

புதுடெல்லி,ஆக3 நாடு முழுவதும் 100 ஸ்மார்ட் நகரங்களை அமைக்கும் திட்டத் துக்கு ரூ.50 ஆயிரம் கோடி ஒதுக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

நிதி ஆயோக், மனிதவள மேம்பாட்டு நிறுவனம் (ஐஎச்டி) மற்றும் புளோரிடா பல்கலைக் கழகத்தின் நகர, மண்டல திட்டமிடல் துறை ஆகியவை சார்பில் ‘நீடித்த மற்றும் அனைவரையும் உள்ளடக்கிய நகர்ப்புற வளர்ச்சி’ என்ற தலைப்பில் சர்வதேச கருத்தரங்கு டெல்லியில்  நடைபெற்றது. இந்தக் கருத்தரங் கில் கலந்துகொண்ட மத்திய நகர்ப்புற மேம்பாட்டுத் துறை அமைச்சர் எம்.வெங்கய்ய நாயுடு பேசியதாவது:

நீடித்த மற்றும் அனைவரையும் உள்ளடக்கிய நகர்ப்புற வளர்ச்சி என்பதுதான் மத்திய அரசின் முக்கிய குறிக்கோள். இதை அடைவதற்கு பெரிய அளவில் நகர்ப்புறங்களில் சீர்திருத்தங்களை செய்ய வேண்டியது அவசியம்.
இதன்படி, நாடு முழுவதும் 100 ஸ்மார்ட் நகரங்களை அமைக்கும் திட்டத்துக்கு ரூ.50 ஆயிரம் கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இதன் கீழ் தேர்ந்தெடுக்கப்படும் ஒவ்வொரு நகரத்தின் மேம்பாட்டுக்கும் ஆண்டுக்கு ரூ.100 கோடி வீதம் அடுத்த 5 ஆண்டுகளுக்கு மத்திய அரசு நிதியுதவி வழங்கும்.

இந்த திட்டத்தின் கீழ் நகரங்களில் வசிக்கும் அனைத்து தரப்பு மக்களுக்கும் வீடு, சுகா தாரமான குடிநீர், தரமான சாலை, போக்குவரத்து வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் உலகத் தரத் தில் செய்து தரப்படும். இவ்வாறு அவர் பேசினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து