முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பாராளுமன்றம் முடக்கம் முடிவுக்கு வருவதில் சிக்கல்: காங்கிரஸ் உறுதி

திங்கட்கிழமை, 3 ஆகஸ்ட் 2015      இந்தியா

புதுடெல்லி,ஆக3, பாராளுமன்றம்முடக்கத்துக்கு தீர்வு காண இன்று அனைத்து கட்சி கூட்டத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ள நிலையில், மத்திய அரசு, காங்கிரஸ் கட்சி ஆகிய இருதரப்பும் தங்கள் நிலைப்பாட்டில் உறுதியாக உள்ளன. இதனால் நடாளுமன்ற முடக்கம் உடனடியாக முடிவுக்கு வருவதற்கான அறிகுறிகள் தென்படவில்லை.

லலித் மோடி விவகாரம் மற்றும் வியாபம் ஊழல் தொடர்பாக நாடாளுமன்றத்தின் இரு அவைகளையும் காங்கிரஸ் கட்சி முடக்கி வருகிறது.

வெளியுறவு அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ், ராஜஸ்தான் முதல்வர் வசுந்தரா ராஜே, மத்தியப் பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் ஆகியோர் பதவி விலக வேண்டும் என்ற கோரிக்கையில் காங்கிரஸ் உறுதியாக இருப்பதால், கடந்த ஜூலை 21-ம் தேதி தொடங்கிய மழைக்கால கூட்டத் தொடரில் முக்கிய அலுவல் எதுவும் நடைபெறவில்லை. 

இக்கூட்டத் தொடரின் 3-வது வாரம் இன்று தொடங்கும் நிலையில், நாடாளுமன்ற முடக்கத்தை முடிவுக்கு கொண்டுவர, இன்று அனைத்து கட்சி கூட்டத்துக்கு மத்திய அரசு அழைப்பு விடுத்துள்ளது. 

இந்நிலையில் இந்த விவகாரத்தில் மத்திய அரசின் முந்தைய நிலைப்பாட்டையே மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத்  திரும்பவும் கூறினார்.

இதுபற்றி அவர் கூறும்போது, “சுஷ்மா விவகாரத்தில் அவர் நாடாளுமன்றத்தில் அறிக்கை அளிக்க தயாராக இருக்கிறார். வசுந்தரா, சவுகான் விவகாரத்தில் அவை மாநில விவகாரம் என்பதால் நாடாளுமன்றத்தில் விவாதிக்க முடியாது” என்றார்.

பாஜக வட்டாரங்கள் கூறும்போது, “நாடாளுமன்ற முடக்கத்தை முடிவுக்கு கொண்டு வர மத்திய அரசு அனைத்து முயற்சிகளும் மேற்கொண்டுள்ளது. எதிர்க்கட்சித் தலைவர்களுடன் பிரதமரும் தொடர்புகொண்டு வருகிறார்” என்றன.

முன்னதாக காங்கிரஸ் மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத் கூறும்போது, “நாடாளுமன்ற முடக்கத்தை முடிவுக்கு கொண்டுவர பேச்சு நடத்துவதில் எங்களுக்கு ஆட்சேபனை இல்லை. ஆனால் பாஜகவின் 3 தலைவர்கள் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது என்ற அடிப்படையில் இது இருக்க வேண்டும். பாஜகவின் 3 தலைவர்கள் மீதான நடவடிக்கையை அறிவிக்க வேண்டும் என்பதே அனைத்து கட்சி கூட்டத்தில் காங்கிரஸ் செயல்திட்டமாக இருக்கும்” என்றார்

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago
View all comments

வாசகர் கருத்து