முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பாராளுமன்றத்தில் ஒழுங்கு முறையை மீறியதாக 25 காங்கிரஸ் எம்.பிக்கள் சஸ்பெண்ட்

செவ்வாய்க்கிழமை, 4 ஆகஸ்ட் 2015      இந்தியா
Image Unavailable

புதுடெல்லி,ஆக4, பாராளுமன்றத்தில் ஒழுங்குமுறையினை மீறியதாக 25காங்கிரஸ் எம்.பிக்களை மக்களவை சபாநாயகர் சுமித்ரா மகாஜன்நேற்று சஸ்பெண்ட் செய்தார்.இந்த நிலையில் பாராளுமன்றத்தை 5நாட்களுக்கு புறக்கணிப்பதாக காங்கிரஸ்,திரிணாமுல் காங்கிரஸ் மற்றும் ஆம் ஆத்மி கட்சியினர் அறிவித்தனர்.

பாராளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் கடந்த மாதம் 21ம் தேதியன்று துவங்கியது.இந்த கூட்டத்தொடரின் போது ஐ.பி.எல் கிரிக் கெட் போட்டியின் போது முறைகேடு செய்த ஐபிஎல் முன்னாள் தலைவர் லலித் மோடிக்கு உதவியதாக வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் மற்றும் ராஜஸ்தான் முதல்வர் வசுந்தரா ராஜே மற்றும் மத்திய பிரதேசம் மாநில தொழில் நுட்ப தேர்வு வாரியம் (வியாபம்) முறைகேடு தொடர்பாக அம் மாநில பாஜக முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் ஆகியோர் பதவி விலக வேண்டும் என காங்கிரஸ் உள்ளிட்ட எதிர் கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன.இந்த விவகாரங்களால் பாராளுமன்றத்தின் இரு அவைகளும் கடந்த 15நாட்களுக்கு முடங்கி வருகின்றன.

இந்த முடக்கத்தை தவிர்த்து அவையை சுமூக மாக நடத்துவதற்கு பாராளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் வெங்கய்யா நாயுடு நேற்று அனைத்து கட்சி கூட்டத்தை நடத்தினார். இந்த கூட்டம் நடந்தபோதும் பாராளுமன்றம் நேற்றும் முடங்கியது.
மக்களவையில் கேள்வி நேரத்தின் போது எதிர் கட்சிகள் கடுமையான அமளியில் ஈடுபட்டன. மாநிலங்களவை நேற்று கூடிய சில நிமிடத்திலேயே நாள் முழுவதும்ஒத்தி வைக்கப்பட்டது.லலித் மோடி விவகாரத்தில் பிரிட்டன் பயண ஆவணங்களை தர வேண்டும் என கூறவில்லை என வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் அறிக் கை தாக்கல் செய்ய முன்வந்தார்.ஆனால் அதனை காங்கிரஸ் கட்சி ஏற்கவில்லை.
தவறு செய்தவர்கள் பதவியில் இருக்கும் வரை அவையில் உரிய விவாதம் நடைபெறாது என்று காங்கிரஸ் கட்சி திட்டவட்டமாக தெரிவித்தது. காங்கிரஸ் கட்சியின் பாராளுமன்ற கட்சி கூட்டத்தில் அக் கட்சியின் தலைவர் சோனியா காந்தி உரையாற்றுகையில், காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி கட்சி ஆட்சி செய்தபோது கடந்த 10ஆண்டுகளில் 5முறை பாஜக கட்சி ஊழல் செய்தவர்களை முதலில் நீக்குங்கள் பின்னர் விவாதம் நடத்தலாம் என்று அமளியில் ஈடுபட்டது என தெரிவித்தார்.
இந்த நிலையில் மக்களவையில் தொடர்ந்து கூச்சல் போட்ட 25காங்கிரஸ் எம்பிக்களை 5நாட்களுக்கு சஸ்பெண்ட் செய்வதாக சபாநாயகர் சுமித்ரா மகாஜன் அறிவித்தார்.இந்த அறிவிப்பு வந்த நிலையில் 5நாட்களுக்கு பாராளுமன்றத்தை புறக்கணிக்கப்போவதாக காங்கிரஸ் அறிவித்தது.

காங்கிரஸ் எம்பிக்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டது குறித்து காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன் கார்கே கூறுகையில் இந்த நடவடிக் கையால் நாங்கள் காயம்அடைந்திருக்கிறோம் .குஜராத் சட்டமன்றத்தை  நடத்துவதைப்போன்று பாராளுமன்றத்தை நடத்த முயற்சி மேற்கொள்ளப்படுகிறது என்று தெரிவித்தார்.

பாராளுமன்றத்தினை 5நாட்களுக்கு புறக்கணிப்பதாக ஆம் ஆத்மி கட்சியும் அறிவித்தது.சஸ்பெண்ட் செய்யப்பட்ட காங்கிரஸ் எம்பிக்களுக்கு ஆதரவாக திரிணாமுல் காங்கிரஸ் கட்சியும் 5நாட்களுக்கு பாராளுமன்றத்தை புறக்கணிப்பதாக அறிவித்தது.சஸ்பெண்ட் செய்யப்பட்ட காங்கிரஸ் எம்பிக்கள் அவையில் இருந்து வெளியேற மறுத்தனர்.அந்த எம்பிக்களின் மீதான ஒழுங்கு நடவடிக் கையை திரும்பப்பெற வேண்டும் என இதர எதிர் கட்சிகளும் வலியுறுத்தின.
நேற்று காலை 11மணிவரை மக்களவை ஒத்தி வைக்கப்பட்டது.பாராளுமன்ற நிகழ்வுகளுக்கான பொறுப்புகளில் இருந்து ஆளும் பாஜ தலைமையிலான அரசு தப்பிக்கிறது என்று சிபிஎம் கட்சியின் பொதுச்செயலாளரும் எம்பியுமான சீதா ராம் யெச்சூரி தெரிவித்தார்.மாநிலங்களவை நேற்று நாள் முழுவதும் ஒத்தி வைக்கப்பட்டது.

தேசிய ஜனநாயககூட்டணி அமைச்சர்கள் எந்த வித தவறும் செய்யவில்லை அவர்கள் ராஜினாமா செய்ய வேண்டிய தேவையில்லை என்று  வெங்கய்யா நாயுடு தெரிவித்தார்.
முறைகேடு செய்த அமைச்சர்கள் முதலில் ராஜினாமா செய்ய வேண்டும் பின்னர்தான் அவையில் விவாதம் நடத்துவோம் என காங்கிரஸ் கூறுவது சரியல்ல. ஜனநாயகத்தின் மீது காங்கிரஸ் நம்பிக் கையை இழந்து இருக்கிறது என்று பாஜக தலைவர் நிதின் கட்காரி கூறினார்.வியாபம் விவகாரம் நீதிமன்ற விசாரணையில் இருக்கிறதுஇந்த நிலையில் அவையை சுமூகமாக நடத்த காங்கிரஸ் மறுக்கிறது என்றும் அவர் கூறினார்.லலித் மோடி விவகாரம் தொடர்பாக சுஷ்மா சுவராஜ் நேற்று அவையில் அறிக் கைதாக்கல் செய்தார்.
பாஜ கட்சி மக்களவையில் பெரும்பான்மையுடன் இருக்கிறது. அந்த கட்சி முறைகேடு தொடர்பான விசாரணைக்கு பதிலாக வெறும் விவாதத்தை நடத்த விரும்புகிறது என சோனியா காந்தி தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து