முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

என் மீதான குற்றச்சாட்டுகள் ஆதாரமற்றவை: சுஷ்மா விளக்கம்

செவ்வாய்க்கிழமை, 4 ஆகஸ்ட் 2015      இந்தியா
Image Unavailable

புதுடெல்லி,ஆக..-4, லலித் மோடி விசா விவாகரத்தில் தன் மீதான குற்றச்சாட்டுகள் ஆதாரமற்றவை என வெளியுறவு அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் விளக்கமளித்துள்ளார். ஊழல் புகாரில் சிக்கியுள்ள ஐ.பி.எல். முன்னாள் தலைவர் லலித் மோடி விசா பெற உதவியதாக எழுந்த சர்ச்சையில் சிக்கியுள்ளார் சுஷ்மா ஸ்வராஜ். இவ்விவகாரத்தில் சுஷ்மா ஸ்வராஜ் பதவி விலகக் கோரி எதிர்க்கட்சிகள் நடத்தி வரும் அமளியால் பாராளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் கடந்த 27-ம் தேதி தொடங்கியது முதல் ஒரு நாள்கூட முழுமையாக நடைபெறவில்லை.

இந்நிலையில், மாநிலங்களவையில் நேற்று காலை இவ்விவகாரம் தொடர்பாக விளக்கமளித்த சுஷ்மா ஸ்வராஜ், கடந்த இரண்டு வாரங்களாக என் மீது ஒரு குற்றச்சாட்டு நிலவி வருகிறது. அதை தெளிவுபடுத்த வேண்டும் என நான் காத்திருக்கிறேன். இப்பிரச்சினையில் தன்னிலை விளக்கம் அளிக்க விரும்புவதாக அவைத்தலைவர் வாயிலாக அவைக்கும் தெரிவித்துவிட்டேன். அவையில் என் நிலைப்பாட்டை தெரிவிக்க வாய்ப்பு கிடைக்கும் என்ற நம்பிக்கையில், ஒவ்வொரு நாள் காலையிலும் அவைக்கு வந்து அமர்கிறேன். ஆனால் அதற்கான சூழல் வாய்ப்பதில்லை. இருப்பினும் இன்று கூறுகிறேன்.

லலித் மோடி வெளிநாட்டு பயணத்துக்காக பிரிட்டிஷ் அரசிடம் நான் எவ்வித கோரிக்கையும் வைக்கவில்லை. இவ்விவகாரத்தில் என் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் அடிப்படை ஆதாரமற்றவை என்றார். மாநிலங்களவையில் சுஷ்மா விளக்கமளித்துக் கொண்டிருக்கும்போதே அவையில் எதிர்க்கட்சியினர் அமளியில் ஈடுபட்டது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்