முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தயாரிப்பாளர் ஆகிறார் பிரபு தேவா

செவ்வாய்க்கிழமை, 4 ஆகஸ்ட் 2015      சினிமா
Image Unavailable

 நடனம், நடிப்பு மற்றும் இயக்கம் என தனது ஒவ்வொரு அசைவிலும் வெற்றியைக் கண்டு வரும் பிரபு தேவா தயாரிப்பாளராக உருவெடுக்க உள்ளார். தனது தயாரிப்பு நிறுவனத்திற்கு ‘Prabhu Deva Studios’ என பெயர் வைத்துள்ளார் பிரபு தேவா. நிறுவனத்தின் Logo முதற்கொண்டு தங்கள் உத்வேகத்தை பதிவு செய்யும் வகையில் அமைத்து இருக்கும் ,பிரபு தேவா ஸ்டுடியோஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனம்,  தாங்கள் தயாரிக்கவிருக்கும் படங்களை பற்றிய அறிவிப்பை ஆகஸ்ட் 3ஆம் தேதி அறிவிக்க உள்ளனர்.

“ சர்வதேச தரத்தில் கதையம்சம் உள்ள திரைப்படங்களை ‘பிரபு தேவா ஸ்டுடியோஸ்’ தயாரிக்க திட்டமிட்டுள்ளது. தமிழ் மட்டுமல்லாது மற்ற மொழி திரைப்படங்களையும் தயாரிக்க திட்டமிட்டு உள்ளோம். தமிழ் திரை உலகில் திறமைக்கு பஞ்சமே இல்லை. தேர்ந்த, அனுபவமுடைய பலரை கொண்டிருக்கிறது.

திறன் வாய்ந்த கலைஞர்கள்,படைப்பாளிகள் மொழி, ப்ராந்தியம் என குறுகிய வட்டத்தில் சிக்கி கொள்ளக்கூடாது அவர்கள் நாடெங்கும் சென்று  தங்களது திறமையை வெளி காட்ட வேண்டும்.நல்ல படைப்பாளிகளை தேர்ந்து எடுத்து  வெவ்வேறு இடங்களுக்கு இட்டு செல்வதில் முனைப்பாக செயல்படும் 'பிரபு தேவா ஸ்டுடியோஸ்' என கூறுகிறார் பன்முகம் கொண்ட பிரபு தேவா.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்