முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மும்பை தாக்குதலில் ஈடுபட்டதீவிரவாதிகள் சிந்து மாகாணத்தில் பயிற்சி பெற்றனர்

செவ்வாய்க்கிழமை, 4 ஆகஸ்ட் 2015      உலகம்
Image Unavailable

இஸ்லாமாபாத் - மும்பையில் கடந்த 2008ம்ஆண்டு பாகிஸ்தான்  லஷ்கர்-இ-தொய்பா தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 166 மக்கள் கொல்லப்பட்டனர்.இந்த தாக்குதலில் ஈடுபட்ட தீவிரவாதிகள் பாகிஸ்தான் சிந்து மாகாணத்தில் உள்ள தட்டா பகுதியில் பயிற்சி பெற்றனர் என்று பாகிஸ்தான் உளவுத்துறையின் முன்னாள் தலைவர் தாரிக் கோசா தெரிவித்தார்.மும்பையில் கடந்த 2008ம்ஆண்டு நவம்பர் மாதம் 26ம் தேதியன்று பாகிஸ்தானைச் சேர்ந்த 10 தீவிரவாதிகள் கடல் வழியாக ஊடுருவி தாக்குதல் நடத்தினார்கள்.இந்த தாக்குதலில் ஈடுபட்டவர்கள் லஷ்கர்-இ-தொய்பா தீவிரவாதிகள் ஆவார்கள்.

அவர்கள் மும்பையின் முக்கிய இடங்களில்  சென்ற மக்களை குருவிகளை சுடுவதைப்போல சுட்டனர். இதில் இந்தியர்கள் மற்றும் அயல் நாட்டவர்கள் என 166 பேர்  உயிரிழந்தனர். இந்த தாக்குதலில் ஈடுபட்ட 10 தீவிரவாதிகளில் அஜ்மல் காசப் என்ற நபர் மட்டுமே உயிருடன் பிடிபட்டார். அவர் இந்திய நீதிமன்றத்தில் விசாரணை செய்யப்பட்டு அவருக்கு துாக்கு தண்டனை விதிக்கப்பட்டது. மும்பையில்தங்கள் நாட்டு தீவிரவாதிகள் நுழைந்து பெரும் படுகொலைகளை செய்ததை பாகிஸ்தான் ஒப்புக் கொண்டே ஆக வேண்டும் என பாகிஸ்தான் உளவுத்துறை யின் முன்னாள் தலைவர் தாரிக் கோசா தெரிவித்தார் .

அவரது கருத்து பாகிஸ்தானில் இருந்து வெளியாகும் டான் நாளிதழில் வெளியிடப்பட்டுள்ளது. மும்பையில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் தங்கள் நாட்டுக்கு தொடர்பு இல்லை என பாகிஸ்தான் முதலில் மறுத்தது.ஆனால் தீவிரவாதி அஜ்மல் காசப் பிடிபட்ட பின்னர் மும்பையில் தாக்குதல் நடத்தியவர்கள் எங்கள் நாட்டை சேர்ந்தவர்கள் என ஒப்புகொண்டது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்