முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தமிழகத்தில் எதிர்க்கட்சிகளின் பந்த் பிசுபிசுப்பு பேருந்துகள் வழக்கம் போல் இயங்கின

செவ்வாய்க்கிழமை, 4 ஆகஸ்ட் 2015      தமிழகம்
Image Unavailable

சென்னை, தமிழ்நாட்டில் பூரண மதுவிலக்கை அமல்படுத்த கோரி ம.தி.மு.க., விடுதலை சிறுத்தைகள் கட்சி, மனிதநேய மக்கள் கட்சி, கம்யூனிஸ்ட் கட்சிகள் ஆகிய கட்சிகள் அறிவித்த பந்த் போராட்டம் பிசுபிசுத்தது. வழக்கம் போல பஸ், ஆட்டோக்கள் ஓடின, தமிழகம் முழுவதும் அனைத்து கடைகளும் திறந்திருந்தன. மாமூல் வாழ்க்கையில் எந்த பாதிப்பும் இல்லை . பொது மக்களின் ஆதரவும் இல்லை.

தமிழகத்தில் பூரண மதுவிலக்கை அமுல்படுத்த வேண்டுமென கோரி மதிமுக. விடுதலைசிறுத்தைகள், கம்யூனிஸ்ட் கட்சிகள்,மனிதநேய மக்கள் கட்சி நேற்று தமிழகம் முழுவதும் பந்த் போராட்டம் அறிவித்தது. இந்த போராட்டத்திற்கு தேமுதிக., காங்கிரஸ், உள்ளிட்ட முக்கிய கட்சிகள் முழு ஆதரவு தெரிவித்திருந்தன. இந்த போராட்டத்தையொட்டி பஸ் நிலையங்கள், டெப்போக்கள் முக்கிய சந்திப்புகள் மக்கள் கூடும் இடங்களில் போலீசார் முன்னெச்சரிக்கையாக பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்தி்ருந்தனர்.

சென்னை கோயம்பேட்டில் இருந்து வெளியூர் செல்லும் பஸ்கள் எப்போதும் போல் நேற்று  புறப்பட்டுச் சென்றன.. மக்கள் கூட்டம் வழக்கம் போல் இருந்தது. சென்னை நகரில் உள்ள வர்த்தக நிறுவனங்கள், வியாபார ஸ்தலங்கள்,ஜவுளி கடைகள், மருத்துவமனைகள் உள்ளிட்ட அனைத்து கடைகளும் திறக்கப்பட்டு வழக்கம் போல் இயங்கியது.மாநகர பஸ்களும் அனைத்து பகுதிகளுக்கும் இயக்கப்பட்டது. தாம்பரம், பெருங்களத்தூர், வேளச்சேரி, பிராட்வே, சென்ட்ரல், எழும்பூர், பகுதிகளுக்கு வந்து செல்லும் மாநகர பஸ்கள் வழக்கம் போல் வந்து சென்றதால் பயணிகள் கூட்டம் நிரம்பி வழிந்தது.

சென்னை உள்ளிட்ட தமிழகம் முழுவதும் உள்ளஅரசு அலுவலகங்கள் மற்றும் தனியார் நிறுவனங்கள் நேற்று வழக்கம்போல் செயல்பட்டது.  வேலைக்கு செல்லும் ஆண், பெண் ஊழியர்கள் வழக்கம் போல் வாகனங்களில் வேலைக்கு சென்று தங்களது பணிகளை காலை தொடங்கி மாலையில் முடித்தனர். ரெயில்களிலும் பயணிகள் கூட்டம் அதிகமாக இருந்தது. கடை அடைக்க வேண்டும் என்று மதிமுக பொதுசெயலாளர் வைகோ உள்ளிட்டோர் வேண்டுகோள் விடுத்திருந்தார். மீண்டும் மீண்டும் கடைகளை அடைத்து பொதுமக்களை அல்லல் படுத்த வேண்டாம் என்று வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் விக்கிரமராஜா கேட்டுக்கொண்டிருந்தார். தமிழகத்தில் அனைத்து கடைகளும் திறந்திருந்தை காணமுடிந்தது. இருந்தபோதிலும் டாஸ்மாக் கடைகளுக்கு முன்பு மதிமுக உட்பட பல்வேறு கட்சியினர் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால், பரபரப்பு ஏற்பட்டது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படவில்லை. இந்த போராட்டத்திற்கு பொதுமக்களின் ஆதரவும் இல்லை.

மதுரை, திண்டுக்கல், தேனி, விருதுநகர்,ராமநாதபுரம், சிவகங்கை, நெல்லை, கன்னியாகுமரி,தூத்துக்குடி ஆகிய தென்மாவட்டங்களில் வழக்கம் போல் கடைகள் திறந்திருந்தன. மதுரை நகரில் ஒரு சில இடங்களில் டாஸ்மாக் கடைகள் முன்பு எதிர்கட்சிகள் நடத்திய ஆர்ப்பாட்டம் போலீசாரால் கட்டுபடுத்த பட்டது. சில இடங்களில் ஆர்ப்பாட்டகாரர்கள் தாங்களாகவே முன்வந்து கைதாகினர். கைது செய்யப்பட்டவர்கள் நேற்று மாலையில் விடுதலை செய்யப்பட்டனர். கோவை, திருச்சி மாவட்டங்களில் அனைத்து கடைகளும் திறக்கப்பட்டிருந்தன. அரசு மற்றும் தனியார் பஸ்கள் வழக்கம் போல் ஓடியது. சென்னை உள்ளிட்ட தமிழகத்தின் அனைத்து நகரங்கள் சிற்றூர், பேரூர் கிராம பகுதிகளில் உள்ள பள்ளி, கல்லூரிகள் வழக்கம் போல் நேற்று திறக்கப்பட்டு மாணவ,மாணவிகள் பள்ளி ,கல்லூரிகளுக்கு சென்றனர். பள்ளி,கல்லூரி வாகனங்களும் வழக்கம் போல் இயங்கியது. தமிழகம் முழுவதும் மதுவிலக்கு என்ற போர்வையில் எதிர்கட்சிகள் அறிவித்த பந்த் போராட்டம் பிசுபிசுத்தது. இந்த போராட்டத்திற்கு பொதுமக்கள் ஆதரவு இல்லை. இதனால் தமிழகத்தில் மாமூல் வாழ்க்கை பாதிக்கபடவில்லை. பந்த்தையொட்டி சென்னை ,மதுரை, கோவை, திருச்சி, நெல்லை, வேலூர், சேலம் உள்ளிட்ட மாநகராட்சி பகுதிகளிலும் பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது. மேலும் தமிழகத்தில் உள்ள கிராமப்பகுதிகளிலும் பலத்த போலீஸ் பாதுகாப்புகள் செய்யப்பட்டிருந்ததால் அசம்பாவித சம்பவகங்கள் நடைபெறா வண்ணம் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டிருந்தது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்