முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கன்னியாகுமரி மாவட்டம், 1 கோடியே 32 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள பதிவுத் துறை அலுவலக கட்டடத்தை முதல்வர் ஜெயலலிதா திறந்து வைத்தார்.

செவ்வாய்க்கிழமை, 4 ஆகஸ்ட் 2015      தமிழகம்
Image Unavailable

சென்னை - தமிழ்நாடு முதலமைச்சர்  ஜெயலலிதா 27.7.2015 அன்று தலைமைச் செயலகத்தில், பதிவுத் துறையின் சார்பில் கன்னியாகுமரி மாவட்டம் - மார்த்தாண்டத்தில் 1 கோடியே 32 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள ஒருங்கிணைந்த பதிவுத் துறை அலுவலக வளாகக் கட்டடத்தை காணொலிக் காட்சி  மூலமாகத் திறந்து வைத்தார்.  மேலும், பதிவுத் துறையின் சார்பில் 46 கோடியே 94 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள  ஒருங்கிணைந்த பதிவுத்துறை அலுவலக வளாகக் கட்டடங்கள், சார்பதிவாளர் அலுவலகக் கட்டடங்கள் மற்றும் வணிகவரித் துறை சார்பில் 11 கோடியே 79 லட்சத்து  58 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள அலுவலகக் கட்டடங்கள் மற்றும் தணிக்கைச் சாவடி கட்டடங்கள் ஆகியவற்றையும் திறந்து வைத்தார்கள்.

 வாடகை கட்டடங்களில் இயங்கி வரும் பதிவுத்துறை அலுவலகங்களில், பதிவு ஆவணங்களைப்  பராமரிப்பதற்கும், பணியாளர்கள் திறம்படப்  பணியாற்றுவதற்கும், போதிய இடவசதி இல்லாததை  கருத்தில் கொண்டும், பொது மக்கள் அதிகம் வந்து செல்கின்ற சார்பதிவாளர் அலுவலகங்களில் பொது மக்களுக்கு தக்க வசதிகள் அளிக்கப்பட வேண்டியதின் அவசியத்தைக் கருதியும்,  வாடகை கட்டடங்களில் இயங்கி வரும் அனைத்து சார்பதிவாளர் அலுவலகங்களுக்கும் சொந்த கட்டடங்கள் கட்டும் திட்டத்தினை தமிழ்நாடு முதலமைச்சர்  ஜெயலலிதா தலைமையிலான அரசு செயல்படுத்தி வருகிறது. அந்த  வகையில், பதிவுத் துறையின் சார்பில் கன்னியாகுமரி மாவட்டம் - மார்த்தாண்டத்தில் தரை மற்றும் இரண்டு தளங்களுடன் மொத்தம் 9768 சதுர அடி கட்டட பரப்பளவில்,  மாவட்டப் பதிவாளர் (நிர்வாகம்), மாவட்டப் பதிவாளர் (தணிக்கை),  1எண் மற்றும் 2எண் இணை சார்பதிவாளர் அலுவலகங்கள் ஆகிய அலுவலகங்களுடன் 1 கோடியே 32 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள ஒருங்கிணைந்த பதிவுத் துறை அலுவலக வளாகக் கட்டடத்தை தமிழ்நாடு முதலமைச்சர்   ஜெயலலிதா காணொலிக் காட்சி மூலமாகத் திறந்து வைத்தார்.

மேலும், விழுப்புரம் மாவட்டம் - விழுப்புரம் மற்றும் கள்ளக்குறிச்சி, ஈரோடு மாவட்டம் -  ஈரோடு மற்றும் கோபிசெட்டிப்பாளையம், திருநெல்வேலி மாவட்டம் - சேரன்மகாதேவி,  திண்டுக்கல் மாவட்டம் - பழனி,  வேலூர் மாவட்டம் -  அரக்கோணம்,  தஞ்சாவூர் மாவட்டம் - கும்பகோணம், காஞ்சிபுரம் மாவட்டம் - செங்கல்பட்டு,  நாமக்கல் மாவட்டம் - நாமக்கல், தருமபுரி மாவட்டம் - தருமபுரி, இராமநாதபுரம் மாவட்டம் - இராமநாதபுரம்,  அரியலூர் மாவட்டம் - அரியலூர் ஆகிய இடங்களில் 16 கோடியே   89 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 13 ஒருங்கிணைந்த பதிவுத்துறை அலுவலக வளாகக் கட்டடங்கள்;  விழுப்புரம் மாவட்டம் - கண்டமங்கலம், உளுந்தூர்பேட்டை, திருக்கோவிலூர், செஞ்சி, மரக்காணம், வானூர், ரிஷிவந்தியம், அவலூர்பேட்டை; தஞ்சாவூர் மாவட்டம் - திருக்காட்டுப்பள்ளி, திருவிடைமருதூர், அய்யம்பேட்டை, அதிராம்பட்டினம்; ஈரோடு மாவட்டம் - அந்தியூர், சூரம்பட்டி, நம்பியூர், அம்மாப்பேட்டை, தூக்கநாயக்கன்பாளையம்; நாமக்கல் மாவட்டம் - வேலகவுண்டன்பட்டி, மோகனூர், எருமைப்பட்டி; கடலூர் மாவட்டம் - புதுச்சத்திரம், குறிஞ்சிப்பாடி, வேப்பூர்; கோயம்புத்தூர் மாவட்டம் - கணபதி, காந்திபுரம், நெகமம், வடவள்ளி; மதுரை மாவட்டம் - திருப்பரங்குன்றம், அலங்காநல்லூர், மதுரை தெற்கு-4எண் இணை சார்பதிவாளர் அலுவலகம்; இராமநாதபுரம் மாவட்டம் - நயினார்கோவில், கீழக்கரை; தருமபுரி மாவட்டம் - கடத்தூர், காரிமங்கலம்; கன்னியாகுமரி மாவட்டம் - மணவாளக்குறிச்சி, இரணியல்; திருநெல்வேலி மாவட்டம் - சுரண்டை, வாசுதேவநல்லூர்; வேலூர் மாவட்டம் - ஆம்பூர், ஒடுகத்தூர்; விருதுநகர் மாவட்டம் - வத்திராயிருப்பு, விருதுநகர்-2எண் இணை சார்பதிவாளர் அலுவலகம்; கரூர் மாவட்டம் - மேலக்கரூர், வெள்ளியணை; சிவகங்கை மாவட்டம் - தேவகோட்டை, இளையான்குடி; பெரம்பலூர் மாவட்டம் - வேப்பூர், பெரம்பலூர்; திருச்சிராப்பள்ளி மாவட்டம் - திருவெறும்பூர், கே.சாத்தனூர்; கிருஷ்ணகிரி மாவட்டம் - பர்கூர், கெலமங்கலம்; புதுக்கோட்டை மாவட்டம் - சுப்ரமணியபுரம், ஆலங்குடி; அரியலூர் மாவட்டம் - கீழப்பழுவூர்;  தேனி மாவட்டம் - சின்னமனூர்; ஆகிய இடங்களில் 30 கோடியே 5 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 56 சார்பதிவாளர் அலுவலகக் கட்டடங்கள்;  என மொத்தம் 48 கோடியே 26 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள பதிவுத் துறை அலுவலகக் கட்டடங்களை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் புரட்சித் தலைவி செல்வி ஜெ ஜெயலலிதா அவர்கள் திறந்து வைத்தார்கள்.

வேலூர் மாவட்டம் - ராணிப்பேட்டையில் 1 கோடியே 40 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள ஒருங்கிணைந்த வணிகவரி அலுவலகக் கட்டடம்; புதுக்கோட்டை மாவட்டம் - புதுக்கோட்டையில் 1 கோடியே 65 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள ஒருங்கிணைந்த வணிகவரி அலுவலகக் கட்டடம்; திருப்பூர் மாவட்டம் - திருப்பூரில் 2 கோடியே 71 லட்சத்து 58 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள ஒருங்கிணைந்த கூடுதல் வணிகவரி  அலுவலகக் கட்டடம்; விழுப்புரம் மாவட்டம் - செஞ்சி, கடலூர் மாவட்டம் - விருத்தாச்சலம், தருமபுரி மாவட்டம் - அரூர், திருநெல்வேலி மாவட்டம் - அம்பாசமுத்திரம் மற்றும் நாங்குநேரி, தூத்துக்குடி மாவட்டம் - திருச்செந்தூர் ஆகிய இடங்களில் 5 கோடியே 11 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 6 வணிகவரி அலுவலகக் கட்டடங்கள்;  நாகப்பட்டினம் மாவட்டம், காரைக்கால்–நாகூர் நெடுஞ்சாலையில் அமைந்துள்ள மேலவாஞ்சூரில் 29 லட்சத்து 20 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள வணிகவரி தணிக்கைச் சாவடிக் கட்டடம்; 

விழுப்புரம் மாவட்டம் - கோட்டக்குப்பத்தில் 29 லட்சத்து 20 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள வணிகவரி தணிக்கைச் சாவடிக் கட்டடம்;  கோயம்புத்தூர் மாவட்டம் - வாளையார் கிராமத்தில் 33 லட்சத்து 60 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள கே.ஜி. சாவடி (வெளிவழி) வணிகவரி தணிக்கைச் சாவடிக் கட்டடம்;என மொத்தம் 11 கோடியே 79 லட்சத்து 58 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள வணிகவரித் துறை அலுவலகக் கட்டடங்கள் மற்றும் தணிக்கைச் சாவடிக் கட்டடங்களை  தமிழ்நாடு முதலமைச்சர்  ஜெயலலிதா திறந்து வைத்தார்.

தமிழ்நாடு முதலமைச்சர் ஜெயலலிதா அவர்களால் வணிகவரி மற்றும் பதிவுத் துறையின் சார்பில் திறந்து வைக்கப்பட்ட கட்டடங்களின் மொத்த மதிப்பு 60 கோடியே 5 லட்சத்து 58 ஆயிரம் ரூபாய் ஆகும்.  இந்த நிகழ்ச்சியில், வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் எம்.சி.சம்பத், தலைமைச் செயலாளர்  கு. ஞானதேசிகன், ., தமிழ்நாடு அரசு ஆலோசகர்     ஷீலா பாலகிருஷ்ணன், . (ஓய்வு), வணிகவரி மற்றும் பதிவுத்துறை முதன்மைச் செயலாளர்  எஸ்.கே.பிரபாகர், ., முதன்மைச் செயலாளர் / வணிகவரி ஆணையர்   க. இராஜாராமன், பதிவுத்துறைத் தலைவர் சு.முருகய்யா, . மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 4 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago