முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

முதல்வர் ஜெயலலிதாவின் சட்டமன்ற அறிவிப்புகள் முழு அளவில் செயல்படுத்த அதிகாரிகளுக்கு அமைச்சர் எஸ்.பி.வேலுமணி அறிவுரை

செவ்வாய்க்கிழமை, 4 ஆகஸ்ட் 2015      தமிழகம்
Image Unavailable

சென்னை: முதலமைச்சர் ஜெயலலிதா, சட்டமன்றத்தில் 110 விதியின் கீழ் வெளியிட்ட அறிவிப்புகள், இந்தஆண்டு இறுதிக்குள் முழுமையாக செயல்படுத்த அனைத்து நடவடிக்கைகளையும்எடுக்க வேண்டும் என அதிகாரிகளுக்கு அமைச்சர் வேலுமணி அறிவுறுத்தியுள்ளார். இது குறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பு :

முதலமைச்சர் ஜெயலலிதா ஆணைப்படி, நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி, சட்டம், நீதிமன்றங்கள்மற்றும் சிறைச்சாலைகள் துறை அமைச்சர் .எஸ்.பி.வேலுமணி நகராட்சி நிர்வாகம் மற்றும் பேரூராட்சிகள் துறை மூலம் மேற்கொள்ளப்பட்டு வரும்வளர்ச்சித் திட்டப் பணிகளின் முன்னேற்றம் குறித்தும், தமிழ்நாடு நகர்ப்புற நிதிமற்றும் அடிப்படை வசதி மேம்பாட்டு கழகத்தின் செயல்பாடுகள் குறித்தும் நேற்று விரிவான ஆய்வு மேற்கொண்டார்.

இந்த ஆய்வுக் கூட்டத்தில் நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி,சட்டம், நீதிமன்றங்கள் மற்றும் சிறைச்சாலைகள் துறை அமைச்சர் வேலுமணி 11மாநகராட்சிகள், 124 நகராட்சிகள் மற்றும் 528 பேரூராட்சிகளில்செயல்படுத்தப்பட்டுவரும் குடிநீர் வழங்கல் பணிகள், சாலைப் பணிகள், பாதாளசாக்கடைத் திட்டங்கள், மழைநீர் வடிகால் பணிகள், புதிய தெருவிளக்குகள்அமைத்தல், திடக்கழிவு மேலாண்மை உள்ளிட்ட வளர்ச்சிப் பணிகளின் முன்னேற்றம்குறித்து விரிவான ஆய்வு மேற்கொண்டார். வளர்ச்சித் திட்டப்பணிகள் மீது தனிக்கவனம் செலுத்தி, விரைந்து முடித்து, பொதுமக்கள் பயன்பாட்டிற்கு உடனடியாககொண்டு வர வேண்டும் என அமைச்சர் அறிவுரைவழங்கினார்.

மேலும், முதலமைச்சர் ஜெயலலிதா, சட்டமன்றப் பேரவை விதி 110-ன் கீழ் அறிவிக்கப்பட்ட அறிவிப்புகள், மானியக் கோரிக்கை அறிவிப்புகள், உள்ளிட்ட அனைத்து அறிவிப்புகளையும் இந்தஆண்டு இறுதிக்குள் முழுமையாக செயல்படுத்த அனைத்து நடவடிக்கைகளையும்எடுக்க வேண்டும் என அமைச்சர் வேலுமணி அறிவுரை வழங்கினார்., சென்னை தவிர்த்த அனைத்து மாநகராட்சிகள், நகராட்சிகள் மற்றும்பேரூராட்சி பகுதிகளில் பொதுமக்களுக்கு வழங்கப்படும் குடிநீர் விவரங்களையும்,மாநகராட்சி, நகராட்சி ஆணையர்கள், செயல் அலுவலர்கள் முதல் அடிமட்டப்பணியாளர்கள் வரை அதிகாலை 6 மணிக்கே களத்தில் நேராகச் சென்று ஒவ்வொருபகுதியாக நேரில் ஆய்வு செய்து, இப்பகுதிகளில் பொதுமக்களுக்குதங்குதடையின்றி குடிநீர் வழங்க அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ளவேண்டும் என அலுவலர்களுக்கு அறிவுரை வழங்கினார். மேலும், நகர்ப்புறபகுதிகளில் டெங்கு காய்ச்சல் போன்ற தொற்று நோய்கள் ஏற்படாமல் தடுக்கஎடுக்கப்பட்டுள்ள முன்னெச்சரிக்கை தடுப்பு நடவடிக்கைகள் குறித்தும் விரிவானஆய்வு மேற்கொண்டார்.

இந்த ஆய்வுக் கூட்டத்தில் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறைஅரசு முதன்மை செயலாளர் .பணீந்திரரெட்டி தமிழ்நாடு நகர்ப்புற நிதிமற்றும் அடிப்படை வசதி மேம்பாட்டு நிறுவன தலைவர் மற்றும் மேலாண்மைஇயக்குநர் டாக்டர் எஸ்.சுவர்னா, இஆப., நகராட்சி நிர்வாக இயக்குநர் .ஜி.பிரகாஷ்,., பேரூராட்சிகளின் இயக்குநர் .ராஜேந்திர ரத்னூ,.,தலைமைப் பொறியாளர்கள், கண்காணிப்பு பொறியாளர்கள், செயற் பொறியாளர்கள்மற்றும் உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்