முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சென்னையில் பிரதமர் நரேந்திரமோடிக்கு முதல்வர் ஜெயலலிதா வீட்டில் மதிய விருந்து

வெள்ளிக்கிழமை, 7 ஆகஸ்ட் 2015      அரசியல்
Image Unavailable

சென்னை, சென்னை போயஸ்கார்டனில் முதல்வர் ஜெயலலிதாவுடன் பிரதமர் மோடி சந்தித்து பேசினார்.
இந்த சந்திப்பி்ன்போது பிரதமருக்கு முதல்வர் ஜெயலலிதா மதிய விருந்தளித்து உபசரித்தார். சென்னை பல்கலைக் கழக அரங்கத்தில் நேற்று தேசிய கைத்தறி தின விழா கொண்டாடப்பட்டது. இதில் பங்கேற்பதற்காக பிரதமர் .நரேந்திர மோடிநேற்று காலை சுமார் 10.30 மணி அளவில் வருகை தந்தார். விமான நிலையத்தில், பிரதமரை வரவேற்பதற்காக போயஸ் தோட்ட இல்லத்திலிருந்து புறப்பட்ட முதல்வர் ஜெயலலிதாவை வழிநெடுகிலும் ஏராளமான தொண்டர்களும், பொதுமக்களும் இருமருங்கிலும் கூடி நின்று உற்சாகமாக வரவேற்றனர். முதலமைச்சரை வாழ்த்தி கோஷங்கள் எழுப்பியும், பதாகைகளை ஏந்தியும் தொண்டர்கள் மகிழ்ச்சி ஆரவாரம் செய்தனர். நிலையத்தில், பிரதமர் நரேந்திர மோடியை கவர்னர் . ரோசய்யா மலர்க்கொத்து வழங்கி வரவேற்றார். இதனைத்தொடர்ந்து, முதல்வர் ஜெயலலிதா, பிரதமர் . நரேந்திர மோடிக்கு பொன்னாடை போர்த்தியும், மலர்க்கொத்து வழங்கியும் வரவேற்றார்.

வரவேற்பு விழா முடிந்த பின்னர் பிரதமர் சென்னை, பல்கலைக் கழகத்திற்கு சென்று அங்கு நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்றார். இதன் பின்னர் சென்னை போயஸ் கார்டனுக்கு வந்தார். அங்கு பிரதமரை முதல்வர் ஜெயலலிதா வரவேற்றார். இதைத்தொடர்ந்து முதல்வர் ஜெயலலிதாவை பிரதமர் மோடியை சந்தித்து பேசினார். இந்த சந்திப்பு நேற்று மதியம் 1-20 மணி முதல் சுமார் 50 நிமிடம் நீடித்தது இந்த சந்திப்பில் பிரதமரிடம் 19 அம்ச கோரிக்கைகள் அடங்கிய மனுவை முதல்வர் ஜெயலலிதா அளித்தார். .பிரதமருக்கு முதல்வர் ஜெயலலிதா தனது இல்லத்தில் மதிய விருந்தளித்தார். இதன் பின்னர் பிற்பகல் 2-20 மணிக்கு அவர் புறப்பட்டு சென்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்