முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

லலித் மோடி விவகாரம்: சுஷ்மா விளக்கம் மீது ராகுல் விமர்சனம்

வெள்ளிக்கிழமை, 7 ஆகஸ்ட் 2015      அரசியல்
Image Unavailable

புதுடெல்லி, லலித் மோடி விசா பெற உதவிய சர்ச்சை குறித்து மக்களவையில் சுஷ்மா ஸ்வராஜ் அளித்த விளக்கம் வார்த்தை ஜாலங்கள் நிறைந்தது, ஆனால் அர்த்தமற்றது என காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி கூறியுள்ளார்.

முன்னதாக வெள்ளிக்கிழமை மக்களவையில் பேசிய சுஷ்மா, போர்ச்சுக்கல் செல்வதற்கான பயண ஆவணங்களை வழங்கும்படி நான் பிரிட்டன் அரசுக்கு எந்த கோரிக்கையும் வைக்கவில்லை. பரிந்துரையும் செய்யவில்லை. அந்த நாட்டு சட்டப்படி நடவடிக்கை எடுக்கலாம். அதனால் இந்திய - பிரிட்டன் உறவு பாதிக்காது என்றுதான் நான் கூறினேன்" எனத் தெரிவித்திருந்தார்.

அவரது கருத்தை ராகுல் காந்தி கடுமையாக விமர்சித்துள்ளார். காங்கிரஸ் மக்களவை உறுப்பினர்கள் இடைநீக்கத்தைக் கண்டித்து 4-வது நாளாக நாடாளுமன்றத்தில் தர்ணாவில் ஈடுபட்டுள்ள ராகுல் காந்தி, "லலித் மோடி விசா பெற உதவிய சர்ச்சை குறித்து மக்களவையில் சுஷ்மா ஸ்வராஜ் அளித்த விளக்கம் வார்த்தை ஜாலங்கள் நிறைந்தது, ஆனால் அர்த்தமற்றது. எப்போதெல்லாம் ஏதாவது தவறி நடைபெறுகிறது, அப்போதெல்லாம் அதுகுறித்து மத்திய அரசு ரகசியம் காக்கிறது என்றார்.

லலித் மோடிக்கு எந்த உதவியும் செய்யவில்லை. என் நிலையில் சோனியா காந்தி இருந்திருந்தால் என்ன செய்திருப்பார் என்று மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் மக்களவையில் வியாழக்கிழமை உணர்ச்சிகரமாக பேசினார்.  இது குறித்து கருத்து தெரிவித்த காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, சுஷ்மா ஸ்வராஜ் ஒரு மகத்தான நாடக் கலைஞர் என விமர்சித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago