முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வேளாங்கண்ணி ஆலயத்திருவிழாவுக்கு சிறப்பு ரயில்கள் : தெற்கு ரயில்வே ஏற்பாடு

சனிக்கிழமை, 8 ஆகஸ்ட் 2015      ஆன்மிகம்
Image Unavailable

சென்னை - வேளாங்கன்னி ஆலய திருவிழாவை முன்னிட்டு தெற்கு ரெயில்வே சிறப்பு ரெயில்களை அறிவித்துள்ளது. மும்பை லோக்மன்யா திலக் டெர்மினலில் இருந்து வேளாங்கன்னிக்கு எண்.01031 சிறப்பு ரெயில் 26 மற்றும் 28–ந் தேதி பகல் 1.15 மணிக்கு புறப்படுகிறது. இந்த ரெயில் வேளாங்கன்னிக்கு மறுநாள் இரவு 10 மணிக்கு சென்றடைகிறது. இதேபோல வேளாங்கன்னியில் இருந்து மும்பை லோக்மன்யா திலக் நிலையத்திற்கு எண்.01032 சிறப்பு ரெயில் 28 மற்றும் 30–ந் தேதி காலை 9 மணிக்கு புறப்பட்டு மறுநாள் மாலை 6.15 மணிக்கு மும்பை சென்றடைகிறது.

இந்த ரெயில் தானே, கல்யாண், லோனவாலா, புனே, சோலாப்பூர், வாடி, ரெய்ச்சூர், மந்த்ராலயம், அடோனி, குண்டக்கல், கூட்டி, கடப்பா, ரேணிகுண்டா, அரக்கோணம், காஞ்சீபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், திருப்பாதிரிப்பூலியூர், சிதம்பரம், சீர்காழி, மயிலாடுதுறை, திருவாரூர், நாகப்பட்டினம் ஆகிய நிலையங்களில் நின்று செல்லும்.சிறப்பு ரெயிலுக்கான முன்பதிவு நேற்று முதல் தொடங்கியது. கூட்ட நெரிசலை குறைப்பதற்காக 9 ரெயில்களில் ஏ.சி. பெட்டிகள் கூடுதலாக தலா ஒன்று இணைக்கப்பட்டுள்ளன. சென்ட்ரல் – மைசூர் – சென்ட்ரல் சதாப்தி எக்ஸ்பிரசில் தற்காலிகமாக ஒரு ஏ.சி. சேர்கார் பெட்டி இணைக்கப்படுகிறது.திருச்சி – ஹவுரா – திருச்சி வாரம் இருமுறை செல்லக்கூடிய ரெயிலில் முதல் வகுப்பு ஏ.சி. பெட்டி ஒன்றும் திருவனந்தபுரம் – வெராவல் – திருவனந்த புரம் வாராந்திர எக்ஸ்பிரசில் ஒரு ஏ.சி. 3 அடுக்கு பெட்டியும் இணைக்கப்படுகிறது.

திருவனந்தபுரம்– சென்ட்ரல்– திருவனந்தபுரம் வாராந்திர எக்ஸ்பிரசில் ஒரு 3 அடுக்கு ஏ.சி. பெட்டியும், எர்ணாகுளம்–பாட்னா– எர்ணாகுளம் வாராந்திர எக்ஸ்பிரசில் ஒரு ஏ.சி. 3 அடுக்கு பெட்டி தற்காலிகமாக இணைக்கப்படுகிறது.மதுரை–ஹசரத் நிஜாமுதீன்– மதுரை சம்பந்க் கிராந்தி வாரம் இருமுறை எக்ஸ்பிரசில் ஒரு ஏ.சி. 3 அடுக்கு பெட்டியும், நாகர் கோவில்–சாந்தோம்–நாகர் கோவிலில் வாராந்திர எக்ஸ்பிரசி 3 அடுக்கு ஏ.சி. ஒரு பெட்டியும் சேர்க்கப்படுகிறது.கோவை–ஹசரத் நிஜாமுதீன்–கோவை கொங்கு வாராந்திர எக்ஸ்பிரசில் ஒரு ஏ.சி. 3 அடுக்கு பெட்டியும், கோவை–செனட்ரல்– கோவை வாராந்திர எக்ஸ்பிரசில் ஒரு 3 அடுக்கு ஏ.சி. பெட்டியும் கூடுதலாக இணைக்கப்படுகின்றன.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 6 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago