முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மதுவிலக்கை ரத்து செய்தது நாங்க தான் சென்னை போராட்டத்தில் ஸ்டாலின் ஒப்புதல்

திங்கட்கிழமை, 10 ஆகஸ்ட் 2015      அரசியல்
Image Unavailable

சென்னை, மதுவிலக்கை ரத்து செய்தது திமுக ஆட்சி தான் என்று சோழிங்கநல்லூரில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் மு.க.ஸ்டாலின் ஒப்புக்கொண்டார்.

மதுவிலக்கை வலியுறுத்தி மாநிலம் முழுவதும் திமுக சார்பில் நேற்று ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன. சென்னை அடுத்த சோழிங்கநல்லூரில் முன்னாள் மேயர் மா.சுப்ரமணியன் தலைமையில் திமுக ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் காலையிலேயே கட்டிங் போட்ட உடன்பிறப்புக்கள் ஏராளமானவர்கள் கலந்து கொண்டு தங்களது மதுவிலக்கு கொள்கை உறுதியை உயர்த்தி பிடித்தனர்.

இந்த போராட்டத்தை தொடங்கி வைத்த திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின், திமுக ஆட்சியில் தானோ மதுவிலக்கை ரத்து செய்தீர்கள் என்று கூறுகிறார்கள். ஆக நான் இப்போதும் சொல்கிறேன் . அதை நாங்கள் மறைக்கவில்லை. அதை மறுப்பதற்கும் நாங்கள் தயாராக இல்லை.

ஒப்புக்கொள்கிறோம். உண்மை தான் இப்போதும் சொல்கிறோம் என்று பேசியதில் திமுகவினருக்கே அதிர்ச்சி. அதை கூறி விட்டு திமுக ஆட்சிக்கு வந்தால் மதுவிலக்கை கொண்டு வருவோம். கருணாநிதி சொன்னதை தான் செய்வார். செய்வதை தான் சொல்வார். திமுக ஆட்சியில் கண்டிப்பாக கருணாநிதி மதுவிலக்கை கொண்டு வருவார் என்று மு.க.ஸ்டாலின் சொன்னதை கேட்டு சரக்கடித்தவர்களே சிரித்தனர்.

சென்னை பீச் ஸ்டேஷன் கலெக்டர் அலுவலகம் அருகே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தை திமுக எம்.பி கனிமொழி தொடங்கிவைத்தார். தொண்டை வலியால் அவர் பேச முடியவில்லை என்று போராட்டத்தில் மட்டுமே கலந்து கொண்டார். சென்னை வள்ளூவர் கோட்டம், மாதவரம் என்று பல்வேறு இடங்களில் திமுக ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன. இருப்பினும் தொண்டர்கள் மிக மிக குறைவாக காணப்பட்டனர். வந்தவர்களில் பலர் திமுக முக்கிய பிரமுகர்களின் பாக்கெட்டுகளையே பார்த்து கொண்டிருந்தனர். போராட்டம் முடிந்ததும் பணம் கைவசமான பலர் டாஸ்மாக் கடைகளை தேடி சென்றனர். அருகில் சென்றதும் ஏமாற்றமே மிஞ்சியது. போராட்டக்களத்திற்கு அருகில் இருந்த டாஸ்மாக் கடைகள் வன்முறைக்கு பலியாகலாம் என்று அச்சத்தால் அடைக்கப்பட்டு, பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்