முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மேகி நூடுல்ஸ் விவகாரம்: நெஸ்லேயிடமிருந்து இழப்பீடு கோரும் மத்திய அரசு

செவ்வாய்க்கிழமை, 11 ஆகஸ்ட் 2015      வர்த்தகம்
Image Unavailable

புதுடெல்லி, மேகி நூடுல்ஸ் விவகாரத்தில் நெஸ்லே நிறுவனத்திடமிருது ரூ.426 கோடி இழப்பீடு கோரவுள்ளது மத்திய அரசு.

நெஸ்லேவின் முறையற்ற வாணிப செயல்பாடுகள் மற்றும் தவறாக வழிநடத்தும் விளம்பரங்கள் ஆகியவற்றுக்காகவும் பிற நடவடிக்கைகளுடன் நிதி அபராதம் ஆகியவை கோரி மத்திய நுகர்வோர் விவகார அமைச்சகம், தேசிய நுகர்வோர் குறைதீர்ப்பாயத்திடம் புகார் பதிவு செய்யவுள்ளது.

நுகர்வோர் பாதுகாப்பு சட்டம் பிரிவு 12-1-டி-யின் கீழ் மத்திய அரசு முதன்முறையாக நடவடிக்கை மேற்கொள்கிறது. இந்தச் சட்டத்தின் படி மத்திய, மாநில அரசுகள் புகார் பதிவு செய்ய முடியும்.

மேகி நூடுல்ஸில் காரீயம் மற்றும் மோனோசோடியம் குளூட்டமேட் அளவுக்கதிகமாக இருப்பதாக எழுந்த புகார்களை அடுத்து நெஸ்லே நிறுவனம் மேகி நூடுல்ஸ் பாக்கெட்டுகளை நாடு முழுதும் திரும்ப பெற்றது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்