முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பொருளாதார வீழ்ச்சியை சரிசெய்ய நாணயத்தின் மதிப்பை குறைத்த சீனா!

செவ்வாய்க்கிழமை, 11 ஆகஸ்ட் 2015      வர்த்தகம்
Image Unavailable

ஷாங்காய், மோசமான பொருளாதார நிலையின் காரணமாகச் சீனா, தனது நாணய மதிப்பை குறைத்துக் கொண்டது. இதன் மூலம் பொருளாதார ஸ்திரதன்மையை அடையும் என அது நம்புகிறது.

சீன சென்டரல் வங்கி இதுகுறித்து கூறுகையில்,

இந்த நடவடிக்கையின் மூலம் புதிய நாணய பரிமாற்ற மற்றும் மேலாண்மை நடவடிக்கையின் ஒரு பகுதியாகச் சீனா நாணயத்தின் மதிப்பு 2 சதவீதம் வரை குறைக்கப்பட்டுள்ளது. இந்த நாணய மதிப்புக் குறைவினால் சீன சந்தைக்குச் சாதகமாகச் சந்தையில் புதிய சூழ்நிலை உருவாகும் எனச் சென்டரல் வங்கி நம்புகிறது.

சர்வதேச சந்தையில் மோசமான பொருளாதார நிலையின் காரணமாக யுவான் 2 சதவீதம் குறைவாகவே மதிப்பிடப்படுகிறது. இந்நிலையில் நாணய மதிப்பைச் சீன அரசு 2 சதவீதம் குறைந்துள்ள நிலையில், சந்தையில் ஸ்திரமான வர்த்தகம் நடைபெறும் எனச் சீன நம்புகிறது.

சீன சந்தையில் அன்னிய முதலீடு அதிகளவில் குறைந்துள்ளதால், ஏற்றுமதி மற்றும் வர்த்தக அளவு கணிசமாகக் குறைந்துள்ளது. இதனை நிலை நாட்டவே சீன அரசு தற்போது போராடி வருகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்