முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஜெயலலிதா நடவடிக்கையால்40 தமிழக மீனவர்கள்விடுதலை: அரசு செலவில் சொந்த ஊருக்கு அனுப்பி வைத்தார் அமைச்சர்

புதன்கிழமை, 12 ஆகஸ்ட் 2015      தமிழகம்
Image Unavailable

சென்னை, முதலமைச்சர் ஜெயலலிதாவின் முயற்சியால் இலங்கை சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டு நாகப்பட்டினம் திரும்பிய 40 மீனவர்களை மீன்வளத்துறை அமைச்சா் கே.ஏ.ஜெயபால் காரைக்கால் துறைமுகத்தில் வரவேற்று அவரது உத்தரவின்பேரில் அரசின் செலவில் சொந்த ஊருக்கு அனுப்பி வைத்தார்.

கடந்த ஜூன் மாதத்தில் நாகப்பட்டினம் காரைக்கால் ராமநாதபுரம் மாவட்டத்தைச் சார்ந்த மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டு சிறை வைக்கப்பட்டிருந்த40 மீனவர்கள் முதல்வர் ஜெயலலிதா முயற்சியால் இலங்கை அரசால்விடுவிக்கப்பட்டு தாயகம் திருப்பி அனுப்பப்பட்டனர் . அவர்களை தமிழக மீன்வளத்துறை அமைச்சர் கே. ஏ. ஜெயபால், மாவட்ட ஆட்சித்தலைவர் பழனிச்சாமி ஆகியோர் காரைக்கால் துறைமுகம் வந்திறங்கிய 40 மீனவர்களையும் வரவேற்றனர். இதன் பின்னர் அவர்களை அரசின் செலவில் சொந்த ஊருக்கு அனுப்பி வைத்தனர். ;.

இது குறித்து அமைச்சர் கே.ஏ.ஜெயபால் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது: . மீனவர்களுக்கு தமிழக முதல்வர் ஜெயலலிதா பல்வேறு நலத்திட்டங்களை நிறைவேற்றி வருகின்றார். குறிப்பாக மீன்பிடித் தடைக்காலங்களில் மீனவர்களுக்கு உதவித்தொகை, மீனவ சமுதாயத்தைச் சார்ந்த குழந்தைகளுக்கு கல்வி மற்றும் விளையாட்டுகளில் தனிமுக்கியத்துவம் தந்து அவர்களுக்கு உயர்கல்வி வழங்க மீன்வளப்பல்கலைக்கழகம், கடல் சார்ந்த பல்கலைக்கழகத்தில் படிக்க கல்வி உதவித்தொகை என பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்திவருகிறார் . அண்டை நாடுகளால் சிறைப்பிடிக்கப்படும் மீனவர்களை உடனடியாக மீட்டு தருவதற்கும் முனைப்பான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்.. மீனவர்கள் சிறை வாடும் காலங்களில் நாளொன்றுக்குரூ. 250 வரை நிதி உதவி வழங்கி வருகிறார்கள் ;.

கடந்த 02.06.2015 அன்று ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த 14 மீனவர்களும் நாகப்பட்டினம் மாவட்டத்தை சேர்ந்த 19 மீனவர்களும் காரைக்கால் மாவட்டத்தைச் சேர்ந்த 7 மீனவர்களும் இலங்கை கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர் ;.இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டு சிறைச்சாலைகளில் இருந்த மீனவர்களைஉடனடியாக விடுவிக்க வேண்டும் என முதல்வர் ஜெயலலிதா வலியுறுத்தியதன் அடிப்படையில் முயற்சி மேற்கொண்டதன் பயனாக 40 மீனவரகளையும் இலங்கை அரசு விடுவித்தது.

விடுதலைச்செய்யப்பட்ட மீனவர்களை இந்திய கடலோர காவல் படையினரிடம் ஒப்படைக்கப்பட்டனர். 40 மீனவர்களும் மாலை 4-30 மணிக்கு காரைக்கால் துறைமுகம் வந்தடைந்தனர். அவர்கள்அனைவரும் அரசின் செலவிலேயே சொந்த ஊருக்கு பத்திரமாக அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர் .என்று தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்