முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

காங்கிரஸ் விதிக்கும் நிபந்தனையை ஏற்க முடியாது: அருண் ஜெட்லி

வெள்ளிக்கிழமை, 14 ஆகஸ்ட் 2015      அரசியல்
Image Unavailable

புதுடெல்லி, சரக்குமற்றும் சேவை வரி மசோதாவை நிறைவேற்றுவதற்கு காங்கிரஸ் விதிக்கும் நிபந்தனைகளை ஏற்க முடியாது என்று மத்திய நிதித்துறை அமைச்சர் அருண் ஜெட்லி கூறினார்.

தலைநகர் டெல்லியில் அருண் ஜெட்லி நேற்று செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர் கூறியதாவது,

பாரதிய மகிளா வங்கியை வேறு எந்த பொதுத்துறை வங்கியுடனும் இணைக்கும் திட்டம் இல்லை.இந்த ஆண்டுஇந்தியாவின் பொருளாதார வளர்ச்சி சாதகமான நிலையிலேயே இருக்கிறது.மொத்தவிற்பனை பண வீக்க விகிதம் 4.05சதவீதமாக குறைந்திருப்பது சாதகமான நிலையாகும்.

சரக்கு மற்றும் சேவை வரி மசோதா அமல் படுத்தப்படும் போது நாட்டின் உள்நாட்டு மொத்த உற்பத்தியும் மேம்பாடு அடையும். நாடு நல்லபொருளாதார வளர்ச்சி யை பெறும். சரக்கு மற்றும் சேவை வரி மசோதாவை (ஜி.எஸ்.டி)நிறைவேற்றுவதற்கு காங்கிரஸ் விதிக்கும் நிபந்தனைகளை நாங்கள் ஏற்க முடியாது.

ஜி.எஸ்.டி மசோதாவை நிறைவேற்றுவதற்கு மோடி அரசுடன் காங்கிரஸ் முன் நிபந்தனைகளை விதிக்கிறது.மத்திய மற்றும் மாநில உறவு விஷயத்தில் ஜி.எஸ்.டி மசோதா குறித்து முன் நிபந்தனை விதிப்பது நல்ல அரசியல் அல்ல.கடந்த சில ஆண்டுகளாக பொருளாதார மந்த நிலையால் பொதுத்துறை வங்கிகள் சவாலை எதிர் கொள்ள வேண்டியிருந்தது.ஆனால் அபாய நிலை ஏதும் ஏற்படவில்லை.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

அரசு செயல்பாடு திட்டங்கள் குறித்து விளக்கம் அளிக்கும்  வகையில் இந்த பேட்டி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்தபேட்டியின் போது மத்திய இணையமைச்சர் ஜெயந்த் சின்கா,நிதிச் சேவை செயலாளர் ஹஸ்முக் அதியா ஆகியோர் இருந்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்