முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இலங்கைக்கு எதிரான முதல் டெஸ்ட்: இந்தியா அதிர்ச்சி தோல்வி

சனிக்கிழமை, 15 ஆகஸ்ட் 2015      விளையாட்டு
Image Unavailable

காலே - இலங்கைக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்தியா 112 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து  63 ரன்களில் தோல்வியடைந்தது.  இலங்கை காலேவில் நடைப்பெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் இந்தியா வெற்றி பெரும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இலங்கை சுழற்பந்து வீச்சாளர் ரங்கனா ஹெராத் சிறப்பான பந்துவீசசில் இந்திய அணி சுருண்டது. அவர் 7 விக்கெட்டுகளை வீழ்த்தி இலங்கை வெற்றிக்கு முக்கியக் காரணமாய் அமைந்தார்.  23 ரன்களுக்கு 1 விக்கெட்டை மட்டுமே இழந்த நிலையில் நேற்றைய ஆட்டத்தை இந்திய அணி தொடர்ந்து. மேலும் 153 ரன்கள் தேவையாயிருக்க நாளின் முதல் சில ஓவர்களில் நிதானமான ஆட்டத்தையே இந்தியா வெளிப்படுத்தியது. 

15-வது ஓவரில் ஹெராத் இஷான் சர்மாவை வெளியேற்றினார். அடுத்து ரோஹித் சர்மா 4 ரன்களுக்கும், கோலி 3 ரன்களும் தங்கள் விக்கெட்டுகளை பறிகொடுத்தனர். தொடர்ந்து வந்த மற்ற வீரர்களும் ஒற்றை இலக்க ரன்னில் ஆட்டமிழக்க, இந்தியாவுக்கு சாதகமாக இருந்த ஆட்டம் மொத்தமாக இலங்கையின் பக்கம் திரும்பியது. உணவு இடைவேளையின் போதே 78 ரன்களுக்கு 7 விக்கெட்டுகளை இந்திய அணி இழந்திருந்தது. 

இடைவேளைக்குப் பிறகு அஸ்வின், ரஹானே, மிஸ்ரா என ஆட்டமிழக்க முடிவில் 112 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து இந்தியா பரிதாப தோல்வியடைந்தது. அதிகபட்சமாக இந்திய அணியின் ரஹானே 36 ரன்கள் எடுத்திருந்தார். இலங்கையின் 2-வது இன்னிங்ஸில் 162 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்த தினேஷ் சந்திமல் ஆட்டநாயகனாக அறிவிக்கப்பட்டார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்